Sunday, April 28, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குஇயலும் இசையும்இந்த விஷயத்துல விக்ரமும் விஜய்சேதுபதியும் ஒன்னுதான்! - சாமுராய்க்கும் 96-க்கும் உள்ள பந்தம்!

    இந்த விஷயத்துல விக்ரமும் விஜய்சேதுபதியும் ஒன்னுதான்! – சாமுராய்க்கும் 96-க்கும் உள்ள பந்தம்!

    விஜய் சேதுபதி நடித்து வெளிவந்த 96 திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்தான் லைஃப் ஆஃப் ராம். அதேபோல் விக்ரம் நடிப்பில் வெளிவந்த சாமுராய் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்தான் மூங்கில் காடுகளே.

    • ‘கரை வந்த பிறகே’ என தொடங்கும் லைஃப் ஆஃப் ராம் பாடலை பிரதீப் குமார் பாட , கோவிந்த் வசந்தா இசையமைக்க, கார்த்திக் நேத்தா வரிகளை எழுதினார்.
    • ‘ மூங்கில் காடுகளே’ பாடலை ஹரிஹரன் மற்றும் திப்பு பாட, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க வைரமுத்து அவர்கள் பாடலுக்கான வரிகளை எழுதினார்.

    இரு பாடல்களும் ஏறத்தாழ ஓரே உணர்வை தன்னுள் கொண்டதுதான். 96 திரைப்படத்தில் விஜய் சேதுபதியும் சரி, சாமுராயில் விக்ரமும் சரி, பாடலை பொறுத்தமட்டில்  ஒரே மனநிலைதான்.

    இரு பாடல்களிலும் இயற்கை வர்ணிப்புகள் அதிகம் தெரிந்தாலும் இரு பாடலிலும் அதிகம் வெளி தெரிவது ஏக்கம் என்ற உணர்வு தான். இருவருக்கும் அவர் அவர் பாதைகளில் தீரா ஆசையும் ஏக்கமும் இருக்க செய்கிறது. அதை இரு பாடல்களும் அழகுற வெளிச்சேர்க்கிறது. 

    ‘காற்றோடு வல்லூறு தான் போகுதே

    பாதை இல்லாமலே அழகாய்

    நிகழே அதுவாய்’

     

    என 96 ராமின் ஏக்கமும் ஆசையும்,

     

    ‘இயற்கை தாயின்

    மடியில் பிறந்து 

    எப்படி வாழ 

    இதயம் தொலைந்து

    சலித்து போனேன் 

    மனிதனாய் இருந்து  

    பறக்க வேண்டும்

    பறவையாய் 

    திரிந்து பறந்து’

     

    என  சாமுராய்  தியாகின் ஏக்கமும் ஆசையும்

    ஒரே நேர்கோட்டில் அமைவதை நாம் காணலாம் .

    இந்த வரிகளை மட்டும் வைத்து கொண்டு இருவரின் ஏக்கமும் ஒன்று என சொல்வது  நியாயமாகாதுதான். ஆனால், பாடல் முழுவதும் இருவரின் கண்களிலும் இயற்கைக்குள் நாம் ஒன்றாகி விட மாட்டோமா என்ற ஏக்கத்தை நாம் அனைவரும் காணலாம்.

    ‘திமிலெறி  காளை  மேல் தூங்கும் காகமாய்

    பூமி மீது இருப்பேன்

    புவி போகும் போக்கில் கை கோர்த்து

    நானும் நடப்பேன்’

     

    என்ற 96 ராமின் எண்ணமும் 

     

    ‘வேரை அறுத்தாலும்

    மரங்கள் வெறுப்பை உமிழ்வதில்லை

    அறுத்த நதியின் மேல் மரங்கள்

    ஆனந்த பூசொறியும்’

     

    என்ற தியாகுவின் எண்ணமும்

    யாரையும் துன்புறுத்தாமல் வாழ விருப்பம் தெரிவிப்பதுதானே!

     

    ராமுவிற்கும் தியாகுவிற்கும் பாதைகள் வெவ்வேறு, உலகங்கள் வெவ்வேறு, பருவங்கள் வெவ்வேறு ஆனால் இருவரின் இயற்கை சார்ந்த ஏக்கம் மட்டும் ஒன்று! 

    ‘பத்தல பத்தல’ கமல்ஹாசனின் இந்த ‘சாகாத’ முகம் உங்களுக்குத் தெரியுமா?

     

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....