Wednesday, March 27, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியா3 ஆண்டுகளில் 9 ஆயிரம் கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்; மத்திய அரசு தகவல்

    3 ஆண்டுகளில் 9 ஆயிரம் கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்; மத்திய அரசு தகவல்

    நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் 9 ஆயிரம் கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

    நாடு முழுவதும் பொதுமக்கள் அதிகம் பயணிக்கும் விமான நிலையம், ரயில் நிலையம் என பல வழிகளில் தங்கம் கடத்தப்பட்டு வருகிறது. குறைந்தபட்சம் வாரத்திற்கு ஒரு செய்தியாவது தங்கம் கடத்தல் சம்பந்தமாக வந்து விடுகிறது. இதனை தடுக்கும் வகையில் சுங்கத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

    இந்நிலையில், நாட்டில் கடந்த ஆண்டுகளில் மட்டும் 8 ஆயிரத்து 956 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் மாநிலங்கள் அவையில் தகவல் தெரிவித்துள்ளது. இதன்படி, தமிழ்நாட்டில் மட்டும் ஆயிரத்து 317.43 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    மேலும் மத்திய அரசுக்கு வந்த ரகசிய தகவல்களின் அடிப்படையில், புலனாய்வு அமைப்புகள் தங்க கடத்தலை தடுக்கும் பணிகளை மேற்கொண்டு வருவதாக மத்திய இணை அமைச்சர் பங்கஜ் சௌத்ரி தெரிவித்துள்ளார். 

    மறைமலைநகர் நகராட்சிக்கு சொந்தமான பசுமை உரக்குடிலில் பயங்கர தீ விபத்து

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....