Friday, March 22, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஉலகமே எதிர்நோக்கும் பிஃபா உலகக்கோப்பை கால்பந்து: பூரி கடற்கரையில் 8 அடி உயர மணற் சிற்பம்

    உலகமே எதிர்நோக்கும் பிஃபா உலகக்கோப்பை கால்பந்து: பூரி கடற்கரையில் 8 அடி உயர மணற் சிற்பம்

    பூரி கடற்கரையில் பிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் பற்றிய 8 அடி உயர மணற் சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

    உலகின் மிகப் பிரபலமான விளையாட்டு போட்டிகளில் ஒன்று உலக கோப்பை கால்பந்து போட்டி. இந்தப் போட்டி கடந்த 1930 ஆம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. 

    கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற இறுதி போட்டியில் பிரான்ஸ் அணி கோப்பையை வென்றது. இந்நிலையில் 2022 ஆம் ஆண்டின் 22 வது உலக கோப்பை கால்பந்து போட்டி நேற்று கத்தார் நாட்டில் வெகு விமர்சையாக தொடங்கியது. இதைத்தொடர்ந்து 2-வது நாளான இன்று 3 லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளன. 

    இதனிடையே, இந்த பிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் பற்றிய 8 அடி உயர மணற் சிற்பம் ஒடிசா மாநிலம், பூரி கடற்கரையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அனைத்து அணிகளுக்கும் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த மணற் சிற்பத்தில், 5 டன் மணல் பயன்படுத்தப்பட்டுள்ளது. 

    மேலும் இந்த போட்டியில் பங்கேற்றுள்ள 32 நாடுகளைச் சேர்ந்த 1,350 நாணயங்களும் இடம்பெற்றுள்ளன. இந்திய நாணயங்களும் அந்த சிற்பத்தில் இடம்பெற்றுள்ளன. தற்போது இந்த மணற் சிற்பம் அனைவரையும் கவர்ந்து வருகிறது.

    சூர்யகுமார் யாதவ் அதிரடியால் இந்தியா வெற்றி; வீணான ஹாட்ரிக்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....