Tuesday, May 7, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடு7 -ஆண்டுகளாக தொடர்ந்த பாலியல் தொல்லை.. போக்சோவில் கைது செய்யப்பட்ட உதவி ஆய்வாளர்

    7 -ஆண்டுகளாக தொடர்ந்த பாலியல் தொல்லை.. போக்சோவில் கைது செய்யப்பட்ட உதவி ஆய்வாளர்

    சிறுவயதில் இருந்தே தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக கல்லூரி மாணவி ஒருவரை மிரட்டி தொடர் பாலியல் தொல்லை கொடுத்து வந்த உதவி காவல் ஆய்வாளர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையிலேயே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    மாநகர காவல் துறையில் விஐபிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் பாதுகாப்பு பிரிவில்(SCP) உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் பாண்டியராஜ். இவருக்கு வயது 50. இவர் ஆலந்தூர் காவலர் குடியிருப்பில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். பாண்டியராஜுக்கு, வில்லிவாக்கத்தைச் சேர்ந்த கணவனை பிரிந்து வாழும் ஒரு பெண்ணுடன் கடந்த 2015-ஆம் ஆண்டு பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியுள்ளது . 10 ஆண்டுகளுக்கும் மேலாக இருவரும் தங்களது கள்ளக்காதலை தொடர்ந்து வந்த நிலையில் தற்போது அது மிகப்பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

    காரணம் பாண்டிராஜின் கள்ளகாதலிக்கு 20-வயதில் கல்லூரி செல்லும் ஒரு மகள் இருக்கிறார். அவரின் மீதும் பாண்டிராஜுக்கு ஆசை ஏற்படவே அவரையும் இவர் விட்டுவைக்கவில்லை. கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த அந்த மாணவியின் தாயாருடன் ஏற்பட்ட தொடர்பை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு தன் கள்ளக்காதலி வீட்டில் இல்லாத நேரத்தில் 13 வயது சிறுமியாக இருந்த மாணவியை காவல் உதவி ஆய்வாளர் பாண்டியராஜன் பலவந்தப்படுத்தி மூன்று முறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதை வெளியில் சொன்னால் உன்னையும் உன் அம்மாவையும் கொன்றுவிடுவேன் என்று மிரட்டியும் வந்துள்ளார். இப்படியே சுமார் 7 ஆண்டுகளாக அந்த மாணவியிடம் தொடர் பாலியல் தொல்லையில் ஈடுபட்டுள்ளார், பாண்டியராஜ்.

    பாண்டியராஜின் இந்த செயல் அவரது கள்ள காதலிக்கும், அதாவது அந்த மாணவியின் அம்மாவுக்கும் தெரியும் என்று கூறப்படுகிறது. மாணவியின் தாயாரும் பாண்டியராஜுக்கு ஆதரவாக அவரது ஆசைகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்க சொல்லி வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், தற்பொழுது தனியார் கல்லூரி ஒன்றில் முதலாமாண்டு படித்து வரும் அந்த மாணவியை கல்லூரிக்கே சென்று சந்தித்து ,சிறுமியாக இருந்ததை விட தற்பொழுது அழகாக இருப்பதாக பேசியதோடு தன்னுடன் மீண்டும் வரவேண்டும், இல்லையெனில் 2015 ஆம் ஆண்டில் இருந்து அவ்வப்போது பாலியல் வன்கொடுமை செய்த போது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்து விடுவேன் என்று மிரட்டி தன் ஆசைக்கு இணங்க சொல்லி வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

    இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அந்த மாணவி பாண்டியராஜின் இந்த செயல் குறித்து கல்லூரியில் தனது நெருங்கிய தோழி ஒருவரிடம் சொல்லி அழுதுள்ளார். அதை கேட்ட அந்த மணவியின் தோழி, இப்போதெல்லாம் காவல்துறை பாலியல் குற்றங்களுக்கு எதிராக உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கிறது. அதுவும் போக்ஸோ சட்டம் குறித்து அணைத்து மாணவிகளும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஒவ்வொரு கல்லூரிகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை காவல்துறையினரே நடத்தி வருகின்றனர் .

    நிச்சயம் இதற்கும் முடிவு கிடைக்கும் என்று நேராக வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று புகார் அளிக்க உதவியுள்ளார். பாலியல் தொந்தரவுக்கு ஆளான மாணவி அளித்த அந்த புகார், போலீசார் நடத்திய விழிப்புணர்வுக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுவதாக தெரிவித்ததோடு , சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியராஜையும் போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சப்-இன்ஸ்பெக்டர் போக்சோ சட்டத்தில் கைதான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புகார் அளித்த அந்த மாணவிக்கு திருமணம் ஆகிவிட்டது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: வருகிறது மின் கட்டண உயர்வு.. அமைச்சர் செந்தில்பாலாஜி அதிரடி தகவல்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....