Thursday, March 21, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்7 மாடி கட்டிடம் விபத்து; 19 பேர் பலி..

    7 மாடி கட்டிடம் விபத்து; 19 பேர் பலி..

    வங்கதேச தலைநகர் டாக்காவில் 7 மாடிக் கட்டிடம் வெடிவிபத்துக்குள்ளானதில் இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளனர். 

    வங்கதேசத்தின் தலைநகர் டாக்கா. இந்நகரில் உள்ள குலிஸ்தான் பகுதியில் 7 மாடிக் கட்டிடம் உள்ளது. சந்தைக்குச் செல்லும் பரபரப்பான சாலையில் இந்த கட்டிடம் உள்ளது. இந்தக் கட்டிடத்தில் வங்கி அலுவலகம், கடைகள், அலுவலகங்கள் இயங்கிவந்தன. மேலும் தரைத்தளத்தில் வேதியியல் பொருட்கள் வைக்கப்பட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது. 

    இந்நிலையில் நேற்று மாலை இந்தக் கட்டிடப் பகுதியில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. இதனால் அந்தப் பகுதியில் ஏதோ குண்டுவெடித்தது என்று மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். ஆனால், கட்டிடத்தில் விபத்து நேர்ந்துள்ளது. 

    இதையடுத்து சம்பவ இடத்துக்கு தீயணைப்புப் படையினரும், போலீஸாரும் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதுவரையில் இந்த விபத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேலும் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

    தொடர்ந்து மீட்பு நடவடிக்கை நடந்து வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. மேலும், இந்த வெடி விபத்துக்கான காரணம் இதுவரையில் தெரியவில்லை. 

    ஆனாலும், அந்தக் கட்டிடத்தின் தரைப்பகுதியில் சட்டவிரோதமாக வேதியியல் பொருட்களைச் சேகரித்து வைத்து இருந்தார்கள் என்றும், அதுவே வெடிவிபத்துக்குக் காரணமாக இருந்திருக்கலாம் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    டபிள்யுபிஎல்: யுபி வாரியர்ஸ் அணியை பந்தாடிய தில்லி அணி!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....