Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்500 ரூபாய் எல்.இ.டி. பல்பிற்கு 5 ஆயிரம் பில் போட்டவர்தான் தான் எடப்பாடி பழனிசாமி; வறுத்தெடுத்த...

    500 ரூபாய் எல்.இ.டி. பல்பிற்கு 5 ஆயிரம் பில் போட்டவர்தான் தான் எடப்பாடி பழனிசாமி; வறுத்தெடுத்த அமைச்சர் பெரியகருப்பன்

    500 ரூபாய் மதிப்பிலான எல்.இ.டி.பல்புகளை 5 ஆயிரம் கொடுத்து வாங்கிய அரசு தான் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு என்று ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் குற்றம் சாட்டினார்.

    ஊரக உள்ளாட்சி துறையில் நம்ம ஊரு சூப்பரு என்ற இயக்கம் தொடர்பாக பேனர் வைத்தது குறித்து எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆளுநரை சந்தித்தபோது புகார் மனு அளித்து இருந்தார்.

    இந்த விவகாரம் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரிய கருப்பன்,

    நம்ம ஊரு சூப்பரு இயக்கத்தின் மூலம் அங்கன்வாடிகள், பள்ளிகள், அரசுகட்டிடங்களில் தூய்மைப்படுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவே உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் பேனர் வைப்பதாகவும், உரிய முறையிலே வைக்கப்படுவதாவும் அமைச்சர் தெரிவித்தார். மேலும் ஊரக பகுதிகளில், ஆகஸ்ட் 15 முதல் அக்டோபர் 2 வரை ‘நம்ம ஊரு சூப்பரு’ என்ற “சிறப்பு மக்கள் இயக்கம்” அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஆகஸ்ட் 15 கிராம சபை கூட்டத்தின்போது துவங்கப்பட்டது. இந்த இயக்கமானது சுகாதாரம், திடக்கழிவு மேலாண்மை, கழிவு நீர் மேலாண்மை மற்றும் நெகிழிகழிவுமேலாண்மை, ஆகியவற்றை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி கிராமப்புற மக்களிடையே மன மாற்றத்தை ஏற்படுத்திடமாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலில்தொடங்கப்பட்டது.நம்ம ஊரு சூப்பரு” இயக்கம், ஒன்றிய அரசின் “தூய்மையே சேவை” இயக்கத்தோடுஇணைந்து செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 2வரை அனைத்து ஊராட்சிகளிலும் நடத்தப்பட்டது.

    நம்ம ஊரு சூப்பரு இயக்கத்தின் மூலம் குப்பைகள் அதிகம்
    சேகரமாகியிருந்த 47399 இடங்கள் கண்டறியப்பட்டு சுத்தம் செய்யப்பட்டன. 21,775 பள்ளிகள், 22,695 அங்கன்வாடி மையங்கள், 45,824 அரசு கட்டிடங்கள், 70,011 சமுதாய சுகாதார வளாகங்கள் தூய்மைப் படுத்தப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி 47,949 நீர் நிலைகள், 1,569 கீ.மீ அளவிலான கழிவுநீர் வடிகால்களும் சுத்தம் செய்யப்பட்டுள்ளன. இதற்காக பயன்படுத்தப்பட்ட பேனர்கள் 611 ரூபாய்க்கு மட்டும் தான் வாங்கப்பட்டது என தெரிவித்தார்.

    ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் கூறுவதால் அது உண்மையாககும் என்ற கற்பனையில் எடப்பாடி பழனிச்சாமி இந்த குற்றச்சாட்டை கூறிவருகிறார்.

    இந்த நிலையில் எதிர்கட்சி தலைவர் ஆதாரமில்லாமல் புகார் தெரிவித்துள்ளதாகவும், அவர் தலைமையிலான ஆட்சியின்போது 500 ரூபாய் உள்ள 20 வாட்ஸ் எல்.இ.டி பல்ப் 5 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கப்பட்டதாக குற்றம் சாட்டினார்.

    ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்தாமல் ஒன்றிய அரசிடம் இருந்து உரிய நிதியை பெறமுடியாமலும், ஜனநாயக படுகொலை செய்த அரசு தான் எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு என்றும் அமைச்சர் குற்றம் சாட்டினார்.

    ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தி சிறப்பான ஆட்சியை முதலமைச்சர் நடத்தி வரும் நிலையில் தான், ஆதாரமில்லாமல் அரசு மீது அவப்பெயரை ஏற்படுத்த எதிர்கட்சி தலைவர் முயற்சி செய்வதாக அமைச்சர் பெரியகருப்பன் கூறினார்.

    ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ், வருகின்ற 2024 ஆம் ஆண்டுக்குள் அனைத்து கிராமத்திலும் குடிநீர் குழாய்கள் அமைக்கப்படும் என தெரிவித்தார்.
    மேலும் 2.75 லட்சம் பிரதமரின் வீடு திட்டத்தின் கீழ் கட்டி முடிக்காத நிலை
    கடந்த அதிமுக ஆட்சியில் நிலவப்பட்டது. இதன் காரணமாக 2019- 20ஆம் ஆண்டுகளில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கு மத்திய அரசிடம் இருந்து நிதி உதவி வழங்கப்படவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.

    Commission, Collection , Corruption என கடந்த அதிமுக ஆட்சியை பற்றி எங்கள் தலைவர் கூறிய வார்த்தைகளைக் கூட மாற்ற தெரியாதவர்கள் அவர்கள்.

    ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவிற்கு ஆளுநரின் ஒப்புதல் கிடைக்குமா? எதிர்பார்ப்பில் தமிழக அரசு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....