Saturday, May 4, 2024
மேலும்
    Homeசெய்திகள்5 மணி நேரத்தில் 50 லட்சம் பனைவிதைகள் நடும் பணி: நிறைவேறுமா அரசின் எண்ணம் ?

    5 மணி நேரத்தில் 50 லட்சம் பனைவிதைகள் நடும் பணி: நிறைவேறுமா அரசின் எண்ணம் ?

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் பனை மரங்களின் எண்ணக்கையை அதிகப்படுத்தும் நோக்கில் 5 மணி நேரத்தில் 50 லட்சம் பனைவிதைகள் நடும் பணிகள் தொடங்கியுள்ளது .

    1000 தென்னை சாய்ந்தாலும் ஒரு பனை சாய ஒரு வாரம் புயல் அடிக்க வேண்டுமாம்.
    அந்த அளவிக்ரு வலிமை வாய்ந்த பனை மரம் இயற்க்கை நமக்கு தந்த பெரும் கொடைகளில் ஒன்று .சித்த மருத்துவத்திலும், இலக்கியங்களிலும், தமிழக மக்களின் வாழ்வாதாரத்திலும் முக்கியப்பங்கு வகிக்கும் ,இந்த பனை மரம் ஆன்மிகத்திலும் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.

    அதனால்தான் தமிழகத்தில் உள்ள பல திருத்தலங்களில் அது தலவிருட்சமாக வணங்கப்படுகிறது.தமிழ்நாட்டில் பனை மரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்ததனால்தானோ என்னவோ அது தமிழக அரசின் சின்னமாகவும் விளங்கி வருகிறது.

    இதன் தாயகம் ஆப்பிரிக்காவாக இருந்தாலும் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில்தான் அதிகமாக காணப்படுகிறது. இந்த மரம் வெப்ப மண்டலத்தில் அதிகமாக வளரக்கூடியது. தமிழகத்தில் மட்டும் 5 கோடிக்கு மேல் பனை மரம் இருந்தது. இப்போது ஆண்டுதோறும் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.

    இதனால் தமிழகத்தில் பனை மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தமிழக முதல்-அமைச்சர் உத்தரவிட்டிருந்தார் . அதன் அடிப்படையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 50 லட்சம் பனை விதைகளை நடும் பணிகளை மாவட்ட நிர்வாகம் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. மாவட்டத்தில் 7 ஒன்றியங்களில் உள்ள 288 ஊராட்சிகளில் தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களைக் கொண்டு பனை விதைகள் சேகரிக்கும் பணிகள் முழு வீச்சில் நடந்தன.

    இதனையடுத்து சேகரிக்கப்பட்ட பனைவிதைகள் அனைத்தும் நடுவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டதை அடுத்து ,தமிழக முதல்-அமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் உத்தரவுப்படி, கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தலைமையில் , இன்று காலை 8 மணிக்கு பனை விதை நடும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது. இப்பணிகளை அமைச்சர் காந்தி மற்றும் மாவட்ட ஆட்சியர் தெ. பாஸ்கர பாண்டியன் ஆகியோர் பார்வையிட்டு தொடங்கி வைத்தனர் .

    5 மணி நேரத்தில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் தேர்வு செய்யப்பட்ட 836 இடங்களில் இதற்கான குழிகள் தோண்டப்பட்டு சுமார் 50 லட்சம் பனை விதைகளை நடவு செய்ய திட்டம் வகுக்கப்பட்டது.

    அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தன்னார்வலர்கள் அதன்படி மாவட்டத்தில் உள்ள தன்னார்வலர்கள் அனைவரின் ஒத்துழைப்புடனும் பனைவிதைகள் நடும் பணி மிகச்சிறப்பாக செய்து முடிக்கப்பட்டது. இது கொஞ்சம் கொஞ்சமாக விரிவுப்படுத்தப்பட்டு , கிராமபுர பகுதிகளில் அரசுக்கு சொந்தமாக இருக்கும் இடங்களில் சீமை கருவேல மரங்களை நீக்கி, அந்த இடங்களிலும்பனை விதைகளை நடவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது .

    மேலும் ஏரிகரை, குளக்கரை, ஆற்றங்கரை, கால்வாய் ஓரம் தரிசாக உள்ள அரசு நிலங்களிலும், ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிளிலும் இந்த பனை விதைகளை நட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .

    இதன் முக்கிய நோக்கமே தமிழ்நாட்டின் பாரம்பரிய மிக்க பனை மரத்தினை அதிக அளவில் நடவு செய்து எதிர்கால சந்ததியினர் அதன் பயன்களை பெற்றுகொள்ளவும், அந்த மரத்தின் மூலம் மனிதர்களாகிய நாம் பெறக்கூடிய பயன்களை முழுமையாக வழங்கிடவும் , இயற்கையை பாதுகாத்து அதனை மேம்படுத்திடவும் வேண்டும் என்பதுதான் .

    இதையும் படிங்க: கட்டு கட்டாக சிக்கிய கள்ள நோட்டுகள்; போட்டி போட்டு எடுத்த பொதுமக்கள்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....