Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஉலகையே உலுக்கிய இந்தோனீசிய கால்பந்து மைதான கலவரம்! பலி எண்ணிக்கை 187 ஆக உயர்வு...

    உலகையே உலுக்கிய இந்தோனீசிய கால்பந்து மைதான கலவரம்! பலி எண்ணிக்கை 187 ஆக உயர்வு…

    இந்தோனேசியாவில் கால்பந்து மைதானத்தில் நேர்ந்த மோதலால், 187 பேர் உயிரிழந்தனர். 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவில் உள்ள மலாங் நகரத்தில் உள்ள கஞ்ஜுருஹான் மைதானத்தில் அரேமா எஃப்சி, பெர்செபயா ஆகிய இரு அணிகளுக்கு இடையே கால்பந்து போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியின் முடிவில் பெர்செபயா அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 

    இதனால், தங்கள் அணியின் தோல்வியால் அரேமா அணி ரசிகர்கள் அதிருப்தியடைந்து, விளையாட்டு வீரர்கள், கால்பந்து அணி அதிகாரிகள் மீது தண்ணீர் பாட்டில்களையும் பிற பொருள்களையும் வீசினர். இதனால், அங்கு வன்முறை உருவானது. 

    இந்த போட்டியின்போது, இந்தோனேசியாவில் கால்பந்து மைதானத்தில் மோதலில் ஈடுபட்ட ரசிகர்களைக் கலைப்பதற்காக காவல் துறையினர் கண்ணீர்ப் புகை குண்டு வீசினர். இதையடுத்து, ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 187 பேர் உயிரிழந்தனர். 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    சனிக்கிழமை இரவு நடந்த இந்த சம்பவத்தில் பெரும்பாலானோர் மூச்சுத்திணறி பலியாகினர். இந்நிலையில், தற்போது விளையாட்டு மைதானங்களில் நடைபெற்ற மிக மோசமான சம்பவங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

    மேலும், ஒரே நேரத்தில் ஏராளமானோர் மைதானத்துக்குள் நுழைந்து 23 ஆண்டுகளாக தோல்வியடையாத அரேமா அணி, இந்தப் போட்டியில் ஏன் தோல்வியுற்றது என விளக்கம் அளிக்கக் கோரி அணி நிர்வாகிகளிடம் கேட்டனர்.

    இதையடுத்து, ரசிகர்களைக் கலைப்பதற்காக காவல் துறையினர் மைதானத்திலும் பார்வையாளர்கள் இருக்கைகளை நோக்கியும் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசினர். மேலும் தடியடியும் நடத்தினர்.

    இதனால் மைதானம் முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. பீதியடைந்த ரசிகர்கள் மைதானத்தைவிட்டு வெளியேற முயன்றபோது கடும் நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி 125 பேர் உயிரிழந்தனர். 300க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் மைதானத்திலேயே 35 பேரும், மற்றவர்கள் மருத்துவமனையிலும் உயிரிழந்தனர்.

    ‘பார்வையாளர்களை நோக்கி காவல் துறையினர் நேரடியாக கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியதால் பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. புகை சூழ்ந்ததால் வெளியேறும் வழியும் தெரியவில்லை’ என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். மைதானத்துக்கு வெளியேவும் வன்முறை ஏற்பட்டது. காவல் துறையின் ஐந்து வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன. 

    பாதுகாவலர்கள் அல்லது காவல் துறையினர் ரசிகர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் புகைக் குண்டு பிரயோகம் மேற்கொள்ளப்படக் கூடாது என்று சர்வதேச கால்பந்து கட்டுப்பாட்டு அமைப்பான பிஃபா கூறுகிறது.

    இந்த உயிரிழப்புகளுக்கு காரணமான கலவரம் குறித்து விசாரணையை தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ள இந்தோனேசிய கால்பந்து அமைப்பு, இந்த நிகழ்வு இந்தோனேசியா கால்பந்து பிம்பத்துக்கு களங்கம் விளைவித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.

    மேலும், விசாரணை முடியும்வரை இந்தோனேசியாவில் கால்பந்து லீக் போட்டிகள் அனைத்தையும் நிறுத்தி வைக்க அந்நாட்டு அதிபர் ஜோகோ விடோடோ உத்தரவிட்டுள்ளார்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....