Tuesday, April 30, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுகோவை கார் வெடி விபத்தில் கைதான 5 பேர் மீது பாய்ந்தது உபா சட்டம்! இனி...

    கோவை கார் வெடி விபத்தில் கைதான 5 பேர் மீது பாய்ந்தது உபா சட்டம்! இனி அடுத்து என்ன நடக்கும்?

    கோவை மாநகரத்தின் முக்கிய பகுதியான கோட்டை ஈஸ்வரன் கோயில் பகுதியில் நேற்று முன்தினம் அதிகாலை கார் வெடித்து அதில் பயணித்த ஜமேஷா முபீன் என்பவர் பலியானார். 

    இந்தச் சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். 

    இந்நிலையில், கோவை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது:

    காரில் இருந்த சிலிண்டர் வெடித்துச் சிதறிய சம்பவத்தில் கைதான 5 பேர் மீதும் உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கூட்டுச்சதி, 120பி, 153ஏ மற்றும் உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

    கைது செய்யப்பட்ட நபர்களில் ஒரு சிலரை, என்.ஐ.ஏ விசாரித்துள்ளது. புலன் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

    உயிரிழந்த ஜமேஷா முபின் பயன்படுத்திய கார் சுமார் 10 பேரிடம் கை மாறியது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. ஜமேஷா முபின் வீட்டில் இருந்து பொட்டாசியம் நைட்ரேட், அலுமினியம் பவுடர் உள்ளிட்ட 75 கிலோ வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

    கார் சிலிண்டர் வெடித்த பகுதியை உடனடியாக துப்பு துலக்கினோம். சிலிண்டர் விபத்து சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

    இவ்வாறு, அவர் தெரிவித்தார். 

    இதையும் படிங்க: பதற்றத்தில் கோவை.. கார் சிலிண்டர் வெடிப்பு எதிரொலியால் வந்த துணை ராணுவம்; 5 பேர் கைது

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....