Sunday, May 5, 2024
மேலும்
    Homeசெய்திகள்சென்னையில் 47-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் கண்காட்சி: தமிழக அரசு அறிவிப்பு

    சென்னையில் 47-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் கண்காட்சி: தமிழக அரசு அறிவிப்பு

    தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் 47-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் கண்காட்சி- டிசம்பர் 2-ம் வாரம் முதல் சென்னையில் நடைபெற உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

    சென்னை தீவு திடலில், ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசின் சுற்றுலாத்துறை சார்பில் குழந்தைகள் முதல் பெரியார்கள் வரை அனைவரையும் கவரும் வகையில் சுற்றுலா மற்றும் தொழில் கண்காட்சி நடத்துவது வழக்கம்.அந்த வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தோற்று பரவலால் கண்காட்சி நடத்தப்படவில்லை.

    அதனால் இந்த ஆண்டு கண்காட்சி நடத்துவது தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு டிசம்பர் 2-ம் வாரம் முதல் 2023 மார்ச் வரை 70 நாட்களுக்கு கண்காட்சி நடைபெறுகிறது. கண்காட்சிக்காக ரூ.1.26 கோடி நிதியும் ஒத்துக்கப்பட்டுள்ளது.1974 முதல் ஆண்டுதோறும் கண்காட்சி நடைபெற்று வருகிறது.

    இதில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி கண்காட்சி நடத்திட வேண்டும் என சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துக்கு, தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.சென்னை தீவுத்திடலில் நடைபெறும் கண்காட்சியில் அரசின் அனைத்து துறைகள் சார்பாக அரங்குகள் அமைக்கப்பட உள்ளது.

    இதையும் படிங்கபிரெய்லி எழுத்துக்களுடன் புதிய பெயர் பலகைகள்: தலைமைச்செயலகத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றம்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....