Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஒரு லட்டு 45 லட்சம்.. அதிக விலைக்கு ஏலம் எடுத்து பரபரப்பை ஏற்படுத்திய தம்பதியினர்!

    ஒரு லட்டு 45 லட்சம்.. அதிக விலைக்கு ஏலம் எடுத்து பரபரப்பை ஏற்படுத்திய தம்பதியினர்!

    தெலுங்கானாவில் உள்ள விநாயகர் கோயிலில் தயாரிக்கப்பட்ட லட்டு பிரசாதம் 45 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள மிகவும் பிரசித்திபெற்ற கோயில்களுள் மரகத ஸ்ரீலட்சுமி விநாயகர் கோயிலும் ஒன்றாகும். இந்தக் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, தயாரிக்கப்படும் லட்டு பிரசாதம் ஏலம் விடப்படுவது வழக்கம். இதில் கிடைக்கும் தொகை, கோயில் மேம்பாட்டு பணிகளுக்காக செலவிடப்படும். 

    அந்த வகையில், இந்த ஆண்டு 12 கிலோ எடையுள்ள லட்டு தயாரிக்கப்பட்டு நேற்று (செப்டம்பர் 11) ஏலம் விடப்பட்டது. தெலுங்கானாவைச் சேர்ந்த வெங்கட ராவ்-கீத ப்ரியா தம்பதி, இந்த லட்டுவை 45 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளனர். 

    இதுகுறித்து, ஏலம் எடுத்த வெங்கட ராவ், ‘இந்த லட்டை ஏலம் எடுத்தால் விநாயகரின் ஆசிர்வாதம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதனால் தான், ஏலம் எடுத்திருக்கிறோம். எங்களுக்கு மட்டுமல்ல நம் நாட்டில் உள்ள அனைவருக்கும் விநாயகரின் ஆசிர்வாதம் கிடைக்க வேண்டுகிறோம்’ என தெரிவித்தார்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....