Saturday, March 23, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுநகைக்காக கொலை செய்த 11 ஆம் வகுப்பு மாணவன்

    நகைக்காக கொலை செய்த 11 ஆம் வகுப்பு மாணவன்

    திருநெல்வேலியில் நகைக்காக பெண்ணை கொலை செய்த வழக்கில் திடீரென 11 ஆம் வகுப்பு மாணவன் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

    திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் அருகே பத்திநாதபுரத்தைச் சேர்ந்தவர் அருள் மைக்கில் என்பவர். இவரின் மனைவி உஷாதேவி (68). இவர் தனது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று உஷாதேவியை பார்ப்பதற்காக அவருடைய வீட்டிற்கு அவரது உறவினர் ஒருவர் சென்றுள்ளார். அப்போது முன்பக்க கதவு பூட்டியிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அந்த நபர் பின் கதவு வழியாக உள்ளே சென்று பார்த்துள்ளார். 

    அந்த சமயத்தில், உஷாதேவி மயங்கிய நிலையில் கீழே விழுந்துள்ளார். இதையடுத்து உஷாதேவியின் உறவினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்ததாக சொல்லப்படுகிறது. மேலும் உஷாதேவியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

    இதனைத்தொடர்ந்து, உஷாதேவியின் கழுத்தில் காயங்கள் இருந்ததும், அவர் அணிந்திருந்த நகைகள் காணாமல் போனதும் உறவினர்களுக்கு தெரியவந்துள்ளது. மேலும் சிசிடிவி டிவிஆர் உடைக்கப்பட்டு இருந்தது. இதனை வைத்து உஷாதேவியின் உறவினர்கள் ராதாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

    இதையடுத்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சோதனை நடத்திய காவல்துறையினர், உஷாதேவியின் வீட்டிற்குள் சென்ற பல்லவிளை பகுதியைச் சேர்ந்த 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். மாணவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நகைக்காக தான் உஷாதேவியை அந்த மாணவன் கொலை செய்தான் என்பது தெரியவந்தது. 

    மேலும் மாணவனுக்கு உதவியாக இருந்ததாக பல்லவிளையை சேர்ந்த ரஞ்சித் மற்றும் நகையை வாங்கியதாக கோலியான்குளத்தைச் சேர்ந்த உதயபிரகாஷ் மற்றும் அவருடைய மனைவி சகாயசுபா ஆகிய மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர்.

    லியோ படக்குழு வெளியிட்ட வீடியோ; உருக்கத்தில் ரசிகர்கள்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....