Saturday, May 4, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழகத்தில் 3.40 கோடி பேர் பூஸ்டர் தடுப்பூசி போடவில்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் வருத்தம்

    தமிழகத்தில் 3.40 கோடி பேர் பூஸ்டர் தடுப்பூசி போடவில்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன் வருத்தம்

    தமிழகத்தில் 3.40 கோடி பேர் கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தவில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

    சென்னை விருகம்பாக்கத்தில் நேற்று (செப்டம்பர்  25) 38-வது மெகா தடுப்பூசி முகாமை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். 

    அப்போது அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியதாவது:

    தமிழகத்தில் இதுவரை 96.55% பேர் முதல் தவணை தடுப்பூசியும், 91.39% பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் நடைபெற்ற கொரோனா மெகா தடுப்பூசி முகாம்கள் நிறைவடைகிறது. 

    அக்டோபர் மாதம் முதல், ஒவ்வொரு புதன் கிழமைகளிலும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் அனைத்து வகையான தடுப்பூசிகள் போடப்படும்.

    இதையும் படிங்க : அதிமுக ஆட்சிக் காலத்தில் 4 ஆண்டுகளாக தாலிக்கு தங்கமே வழங்கவில்லை – அமைச்சர் பி.டி.ஆர்

    இதேபோல், இலவச பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி, வரும் 30-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. அதன் பின்னர், பணம் செலுத்தி தனியார் மருத்துவமனைகளில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படுமா என்பது தெரியவில்லை. அடுத்த 3 தினங்களில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும். 

    பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதுவரை 20.04% பேர், அதாவது, 86,31,976 பேர் மட்டுமே பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனர்.

    மக்களைத்தேடி மருத்துவம் திட்டம் துவங்கி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, 90 லட்சமாவது பயனாளிக்கு மருந்து பெட்டகம் வழங்கப்பட்டது. தமிழகத்தில் இதுவரை 74% பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னையில் 40% பேருக்கு இந்த திட்டத்தின் மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    குறிப்பாக, உயர் ரத்த அழுத்த நோயாளிகள் 35 லட்சம் பேரும், நீரழிவு நோய்க்கு 24 லட்சம் பேரும், உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரழிவு நோய் என இரு நோய்களும் பாதிக்கப்பட்ட 18 லட்சம் பேரும், பேலியேட்டிவ்கேர் என்ற நோய் ஆதரவு நோயாளிகள் 3 லட்சம் பேரும், பிசியோதெரபி நோயாளிகள் 7.85 பேரும், டயாலிசிஸ் சிகிச்சையில் உள்ள 1000 பேரும் பயனடைந்துள்ளனர். விரைவில் இந்த எண்ணிக்கை ஒரு கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....