Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடு2-வது முறையாக வந்த வெடிகுண்டு மிரட்டல் - இன்றும் பள்ளிக்கு விடுமுறை

    2-வது முறையாக வந்த வெடிகுண்டு மிரட்டல் – இன்றும் பள்ளிக்கு விடுமுறை

    தனியார் பள்ளிக்கு 2-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டதை அடுத்து பள்ளிக்கு இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

    திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ள பஞ்செட்டியில் உள்ள தனியார் பள்ளிக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இதன்காரணமாக நேற்று பள்ளிக்கு விடுமுறை அளித்து மாணவர்கள் வீட்டிற்கு அனுப்பி  வைக்கப்பட்டனர். இதனைத்தொடர்ந்து, மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தப்பட்டது. 

    இதையும் படிங்க: எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு – மருத்துவ கல்வி இயக்குநரகம் அறிவிப்பு

    இந்நிலையில், நேற்று இரவும் அதே பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனால், இன்றும் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

    2-வது முறையாக வந்த வெடிகுண்டு மிரட்டலை அடுத்து மோப்ப நாயின் உதவியுடன், வெடிகுண்டு நிபுணர்கள் இன்றும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    இதனால், அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....