Monday, April 29, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் களைகட்டபோகும் கலைத்திருவிழா!

    சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் களைகட்டபோகும் கலைத்திருவிழா!

    தமிழ் கலாச்சாரம், பாரம்பரியத்தைப் போற்றும் வகையில் மெட்ரோ ரயில் நிலையங்களில் 2 நாட்கள் கலை நிகழ்சிகள் நடத்தப்பட இருப்பதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

    இது தொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

    தமிழ் கலாச்சாரம், பாரம்பரியத்தைப் போற்றும் வகையில் விமான நிலையம், கிண்டி, நந்தனம், ஆயிரம் விளக்கு, மண்ணடி, சென்ட்ரல், பரங்கிமலை, அசோக் நகர், திருமங்கலம் ஆகிய மெட்ரோ ரெயில் நிலையங்களில் வரும் சனிக்கிழமை (நாளை) கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. 

    இதுபோல, மெட்ரோ ரெயில்களில் (விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரை) இரவு 7 மணிக்கும், சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரை செல்லும் ரெயிலில் இரவு 7 மணிக்கும் மெல்லிசை கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது. 

    இதுபோல, விம்கோ நகர், வண்ணாரப்பேட்டை, ஆலந்தூர் மெட்ரோ, விமான நிலையம், வடபழனி, கோயம்பேடு, செனாய் நகர், நேரு பூங்கா ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களில் கலை நிகழ்ச்சி டிச.18-ம் தேதி (நாளை மறுநாள்) நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளைச் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், ஆன் தி ஸ்டீரிட் ஆப் சென்னை கலைக் குழு இணைந்து செய்துள்ளன.

    இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஒரே கதை ஆனாலும் வெற்றிப்பெற்ற அவதார்; ஒரு கடந்த கால பயணம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....