Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஇந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி - அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த வங்கதேசம்..

    இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி – அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த வங்கதேசம்..

    இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி 150 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

    இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரும், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரும் நடைபெறவுள்ளது. 

    இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வங்கதேச அணி கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து, கடந்த 14-ஆம் தேதி காலை 9 மணியளவில் சிட்டகாங்கில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் விளையாடும் முதலாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கைத் தேர்வு செய்தது. 

    இதைத்தொடர்ந்து, நடைபெற்ற முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் எடுத்தது. இதன் பின்பு நடைபெற்ற இரண்டாவது நாள் ஆட்டத்தில் இந்திய அணி தனது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, முதல் இன்னிங்ஸில் 404 ரன்கள் எடுத்தது. 

    இதற்கு பின்பு களமிறங்கிய வங்கதேச அணி, இரண்டாவது நாளான நேற்றைய ஆட்டத்தில், 8 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்தது. இதைத்தொடர்ந்து, இன்று மூன்றாவது நாள் ஆட்டம் தொடங்கியது. 

    இன்றைய ஆட்டத்தின் தொடக்கத்திலேயே, மீதமிருந்த இரண்டு விக்கெட்டுகளையும் வங்கதேச அணி இழந்தது. மொத்தத்தில், தனது முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி 150 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

    தற்போது இந்திய அணியானது, இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. 

    ஒரே கதை ஆனாலும் வெற்றிப்பெற்ற அவதார்; ஒரு கடந்த கால பயணம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....