Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்காதலுக்கு கண்கள் இல்லே மானே: 18 வயது சிறுமி 78 வயது ஆணுடன் விசித்திரமான காதல்...

    காதலுக்கு கண்கள் இல்லே மானே: 18 வயது சிறுமி 78 வயது ஆணுடன் விசித்திரமான காதல் திருமணம்

    18 வயது நிரம்பிய இளம் பெண் ஒருவர் 78 வயது மதிக்கத்தக்க முதியவரை மூன்று ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ள நிகழ்வு பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இவர்களின் திருமணம் குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி பரவலாக பகிரப்பட்டு வருகிறது .

    காதலுக்கு கண் இல்லை. எப்போது, ​​எங்கே.. யாரிடம் பிறக்கும் என்று சொல்வது கடினம்.அப்படியான ஒரு நிகழ்விற்கு எடுத்துக்காட்டுதான் ரஷாத் மங்காகோப் என்ற 78-வயது முதியவரின் காதல் திருமணமும்.

    பிலிப்பைன்ஸ் நாட்டில் காகயான் மாகாணத்தில் வசித்து வருபர்தான் ரஷாத் மங்காகோப் என்ற ஓய்வு பெற்ற விவசாயி. 78 வயது மதிக்கத்தக்கவரான இவர் திருமணமே செய்துகொள்ளாமல் இருந்ததாக கூறப்படுகிறது. ஒருநாள் இரவு விருந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார். அங்கு அந்த நிகழ்ச்சியில் ஹலிமா அப்துல்லா என்ற 18 வயது மதிக்கத்தக்க பெண்ணை சந்தித்துள்ளார். இங்கு ஆரம்பித்த இவர்களின் அறிமுகம், நட்பாக தொடங்கி நாளடைவில் காதலாக உருவெடுத்துள்ளது.

    மூன்று ஆண்டுகள் ஒருவர் மீது ஒருவர் மிகுந்த அன்புடன் இருந்து வந்ததோடு ,தங்களது காதல் குறித்த விஷயங்களை இரு வீட்டாரிடம் தெரிவித்துள்ளனர் .சமீபத்தில், குடும்ப உறுப்பினர்களின் சம்மதத்துடன், இருவரும் உறவினர்கள் முன்னிலையில் திருமணமம் செய்து கொண்டனர் .

    இது குறித்து ரஷாத் மங்காகோப்பின் சகோதரரின் மகள் கூறுகையில், ரஷாத் மங்காகோப்பும், ஹலிமா அப்துல்லாவும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பார்ட்டி ஒன்றில் சந்தித்துக்கொண்டனர். இந்த வரிசையில்தான் ரஷாத் மங்காக்கோப்பை ஹலிமா அப்துல்லா விரும்பினார். அதன்பிறகு, ரஷாத் மங்காகோப்பும் அவளை காதலிப்பதை வெளிப்படுத்தினார். மூன்று வருட காதலுக்குப் பிறகு ஆகஸ்ட் 25 அன்று திருமணம் செய்து கொண்டதாக அவர் விளக்கினார்.

    இதில் விசித்திரமான விஷயம் என்னவென்றால், ரஷாத் மங்காகோப்பின் முதல் திருமணம் ஹலிமா அப்துல்லாவுடன் நடந்தது. இதை அவரே வெளிப்படுத்தினார். ‘ஹலிமா அப்துல்லாவைத் தவிர என் வாழ்நாளில் வேறு எந்தப் பெண்ணையும் காதலித்ததில்லை. தனக்கு திருமணம் கூட ஆகவில்லை என்று கூறியுள்ளார்.

    இந்த திருமணம் எங்கு நடந்தது என்று கூறவில்லை என தெரிகிறது. இந்த காதல் திருமணம் பிலிப்பைன்ஸ் நாட்டில் நடந்தது. அங்குள்ள சட்ட திட்டங்களின் படி.. 21 வயதுக்குட்பட்ட இளம் பெண்களும், ஆண்களும் பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ளலாம். இதனிடையே.. இந்த திருமணம் தொடர்பான செய்தி தற்போது வைரலாகி வருகிறது. இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நெட்டிசன்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....