Friday, May 3, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியா2 குழந்தைகளுக்கு மறுவாழ்வு தந்த 18 மாத இளம் பிஞ்சு-மனதை கரைய வைத்த சம்பவம்

    2 குழந்தைகளுக்கு மறுவாழ்வு தந்த 18 மாத இளம் பிஞ்சு-மனதை கரைய வைத்த சம்பவம்

    தில்லியில் 18 மாத குழந்தை, தான் உயிரிழந்த பின்பும் பல உயிர்களைக் காக்க வைத்துள்ளது . 

    ஹரியானா மாநிலம், மீவாட் மாவட்டத்தில் நூ என்ற பகுதியைச் சேர்ந்தவர் மஹிரா (18 மாதக் குழந்தை). இந்தக் குழந்தை பால்கெனியில் விளையாடி கொண்டிருக்கும் சமயத்தில் தவறி கீழே விழுந்ததில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால், அந்தக் குழந்தை கடந்த நவம்பர் 6 ஆம் தேதி தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். 

    தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த நவம்பர் 11 ஆம் தேதி குழந்தைக்கு மூளைச்சாவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதன் காரணமாக மஹிராவின் உடல் உறுப்புகளை தானம் செய்வதாக அவரது பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்தனர். 

    இதைத்தொடர்ந்து, தில்லி ஐஎல்பிஎஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 6 வயதான ஒரு குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மஹிராவின் நுரையீரல் பொருத்தப்பட்டது. 

    இதையடுத்து, எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 17 வயதுள்ள ஒருவருக்கு மஹிராவின் இரண்டு சிறுநீரகங்களும் பொருத்தப்பட்டது. 

    மேலும் இதயமும் கார்னியாவும் பாதுகாக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

    இதுகுறித்து, எய்ம்ஸ் மருத்துவர் தீபக் குப்தா, உடல் உறுப்புகள் தானம் செய்த 2-வது குழைந்தை என்றும் இதற்கு முன்னதாக 18 மாதமான ரிஷந்த் உடல் உறுப்புகளை தானம் செய்ததாகவும் தெரிவித்தார். 

    இந்தியாவில் 0.4 மில்லியன் உடல் உறுப்புக்கள் தானம் செய்யப்படுவதாகவும், அமெரிக்கா மற்றும் ஸ்பெயின் நாட்டில் அதிக அளவு உடல் உறுப்பு தானம் செய்யப்படுவதாகவும் மருத்துவர் தீபக் குப்தா குறிப்பிட்டார். 

    இதையும் படிங்க: பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றிய இங்கிலாந்து – துவம்சம் செய்த ஸ்டோக்ஸ்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....