Tuesday, April 30, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஇந்திய மருந்தை குடித்து 18 சிறுவர்கள் உயிரிழப்பு; உஸ்பெகிஸ்தான் குற்றச்சாட்டு..

    இந்திய மருந்தை குடித்து 18 சிறுவர்கள் உயிரிழப்பு; உஸ்பெகிஸ்தான் குற்றச்சாட்டு..

    இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மருந்தை குடித்ததால் 18 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக உஸ்பெகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. 

    இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்துகள் ரஷ்யா, தென்னாப்பிரிக்கா, நைஜிரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில் உஸ்பெகிஸ்தானும் அடங்கும். 

    இந்நிலையில், உஸ்பெகிஸ்தானில் மருத்துவமனைகளில் இருமலுக்கு மருந்து குடித்ததால் உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக 21 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டனர். அதில், 18 குழந்தைகள் உயிரிழந்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    இது குறித்து உஸ்பெகிஸ்தான் அரசு விசாரணை நடத்தி அறிக்கை சமர்பித்துள்ளது. அந்த அறிக்கையின்படி, இந்தியாவின் நொய்டா நகரை சேர்ந்த மரியோன் பயோடெக் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் டாக்-1 மேக்ஸ் என்ற மருந்தை இருமலுக்காக சிறுவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. 

    மேலும், மருத்துவர் அனுமதியின்றி, மருந்தாளுநரை மட்டுமே பரிசலீத்து  2-7 நாள்கள் வரை தினமும் 3 முறை 2.5 முதல் 5 மி. வரை இந்த மருந்தை பெற்றோர்கள் தன் குழந்தைகளுக்கு கொடுத்துள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது. 

    அதேசமயம்,  டாக்-1 மேக்ஸ் மருந்துகளை ஆய்வு செய்ததில், எத்திலீன் கிளைகோல் என்ற நச்சுத்தன்மை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

    இதனால், உஸ்பெகிஸ்தான் முழுவதும் மருந்து விற்பனையகத்திலிருந்து டாக்-1 மேக்ஸ் மருந்துகள் அனைத்தும் திரும்பப் பெறுவதாக உஸ்பெகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து, இந்தியா தரப்பில் மருந்துகளை ஆய்வு செய்ய விசாரணைக் குழு அமைக்கப்படவுள்ளது.

    ஆசிரியர்கள் போராட்டம்; 40-க்கும் மேற்பட்டோர் மயக்கம்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....