Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்த நாள் விழா- அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் கொண்டாட்டம்

    பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்த நாள் விழா- அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் கொண்டாட்டம்

    முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. 

    அண்ணா, தமிழ் மொழியில் மிகுந்த புலமை பெற்றவர் என்பதால், பேரறிஞர் அண்ணா என அன்போடு அழைக்கப்படுகிறார். 

    இவர் 1909 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி நடராஜன்-பங்காரு அம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தார். அண்ணா காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பா உயர்நிலைப்பள்ளியில் ஆரம்பக் கல்வியை பயின்றார். அதன் பின்பு, தனது உயர் கல்வியை சென்னை பச்சையப்பா கல்லூரியில் பயின்றார்.

    இவர் முதலில் பி.ஏ.(ஹார்ன்ஸ்) பட்டம் பெற்றார். பிறகு, பொருளாதாரத்திலும் அரசியலும் முதுகலைப் பட்டம் பெற்றார். அவர் சிறுவயதிலிருந்தே அரசியலில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்ததால், பெரியாரின் திராவிட கழகத்தில் சேர்ந்தார். பிறகு அதிலிருந்து விலகி, 1949 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதி  திராவிட முன்னேற்றக் கழகத்தை தொடங்கினார். 

    இதையும் படிங்க: அரசின் நடவடிக்கையால் மீட்கப்பட்ட நிலம் – இந்து சமய அறநிலையத் துறை அறிவிப்பு

    அண்ணா தமிழக முதல்வராக இரண்டு ஆண்டு காலம் பணியாற்றினார். பிறகு, 1969 ஆம் ஆண்டு பிப்ரவரி 3 ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். அண்ணாவின் இறுதி மரியாதையில் திரளான மக்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வு கின்னஸ் உலக சாதனையில் இடம்பெற்றது. 

    இந்நிலையில், முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

    அண்ணாவின் 114-வது பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் தலைவர்கள்  தொண்டர்கள் என அவரின் சிலைக்கும் திருவுரப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....