புது தில்லி: கடந்த சில தினங்களாக இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 1,112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் நேற்றைய தொற்று பாதிப்பு 830 ஆக இருந்த நிலையில், இன்று சற்று அதிகரித்து 1,112 ஆக பதிவாகியுள்ளது.
இது தொடர்பாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று (அக்டோபர் 27) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
வியாழக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 1,112 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இது நேற்றைய பாதிப்பை விட சற்று அதிகமாகும் .
இதனால், இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,46,46,880 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை நேற்றை விட இன்று சற்று அதிகரித்து தற்போது 20,821 பேர் மட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து , இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,28,987 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1,892- ஆக உள்ள நிலையில் , தற்போது கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,40,97,072ஆக அதிகரித்துள்ளது .
நேற்று ஒரு நாளில் மட்டும் 1,22,555 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது .இதனால், நாடு முழுவதும் இதுவரை 2,19,58,84,786 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: வாகன ஓட்டிகளே உஷார்! இன்று முதல் புதிய போக்குவரத்து விதிமுறை அமலுக்கு வந்தது