Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்மழைநீர் வடிகால் பணிகள் 100% நிறைவு: அமைச்சர் எ.வ. வேலு

    மழைநீர் வடிகால் பணிகள் 100% நிறைவு: அமைச்சர் எ.வ. வேலு

    தமிழகத்தில் அடுத்த ஆண்டுக்குள் 540 மேம்பாலம் கட்டி முடிக்கப்படும், சென்னை புறநகர் பகுதியில் 100% கால்வாய் தூர்வாரும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாக பொதுபணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

    சென்னை ஈக்காட்டுத்தாங்கல், கே கே நகர், அசோக் நகர், வடபழனி, சூளைமேடு உள்ளிட்ட பகுதிகளில் நெடுஞ்சாலை துறை சார்பாக மழைநீர் வடிகால் பணிகளை பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை எ.வ. வேலு ஆய்வு மேற்கொண்டார்.

    ஆய்வுக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்,

    கே.கே. நகர் அசோக் நகர் பகுதியில் மழை நீர் வடிகால் பணிகள் 800 மீட்டர் தூரத்திற்கு 5.50கோடி ரூபாயில் பணிகள் முடிவடைந்துள்ளது. கன மழை பெய்தாலும் மக்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என அமைச்சர் தெரிவித்தார்.
    வடபழனி- பெரியார் பாதையில் கடந்த ஆட்சி காலத்தில் மழை நீர் அதிகமாக தேங்கி இருக்கும், தற்போது அரும்பாக்கம் கால்வாய்யை தூர்வாரும் பணிகள் முடிவடைந்துள்ளதால் சாலைகளில் மழை நீர் தேங்காமல் இருக்கும் அதற்கான பணிகளும் நடைப்பெற்று வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

    தமிழகத்தில் 1280 தரைப்பாலம் இருக்கிறது. அனைத்தும் மேம்பாலங்களாக மாற்றி அமைக்க தமிழக முதல்வர் நிதி ஒதுக்கியுள்ளார். அடுத்த ஆண்டுக்குள் 540 மேம்பாலங்கள் கட்டி முடிக்கப்படும். இனி தமிழகத்தில் தரைபாலங்களே இருக்காது‌. அனைத்தும் மேம்பாலங்களாக மாற்றி அமைக்கப்பட்டு வருவதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
    மேலும் சென்னை புறநகர் பகுதி 100% கால்வாய் தூர்வாரும் பணிகள் முடிவடைந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் உணவு பஞ்சம்.. 2 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு; முடிவுக்கு வருமா ரஷ்யா-உக்ரைன் போர்?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....