Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு - ஓ.பி.எஸ் தரப்பு அதிரடி முடிவு  

    உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு – ஓ.பி.எஸ் தரப்பு அதிரடி முடிவு  

    பொதுக்குழு செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வரும் 5ஆம் தேதி ஓ. பன்னீர்செல்வம் மேல்முறையீடு செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது .

    அதிமுக பொதுக்குழு வழக்கில் எடப்பாடி பழனிச்சாமிக்கும் ஓ.பன்னீர் செல்வத்திற்கும் இடையே பரமபத விளையாட்டு போல் மாறி மாறி நடைபெறும் சம்பவங்களால் தொண்டர்கள் ஒருவித குழப்ப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

    அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக நேற்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில் ஜூலை 11-ம் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என்றும், எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தொடரலாம் என்றும் கூறப்பட்டிருந்தது. 

    இந்த தீர்ப்பு குறித்து நேற்று (செப்டம்பர் 2) செய்தியாளர்கள் எழுப்பியிருந்த கேள்விக்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு, டெல்லி உச்ச நீதிமன்றத்தில் அ.தி.மு.க. சார்பில் மேல்முறையீடு செய்யப்படும் என்று தெரிவித்திருந்தார். 

    இந்த நிலையில் ஜூலை 11 ஆம் தேதி நடந்த பொதுக்குழு செல்லும் என்ற சென்னை உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வரும் 5ஆம் தேதி (திங்கட்கிழமை) மேல்முறையீடு செய்ய உள்ளதாக ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதி ஆகாமல் பொதுக்குழுவை கூட்டியது எப்படி செல்லும் என்று ஓ.பி.எஸ் தரப்பு நீதிமன்றத்தில் முறையிட திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது .

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....