Wednesday, March 27, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்யுவன் குறித்து 'லவ் டுடே' இயக்குநர் போட்ட பதிவு; கடுப்பில் ரசிகர்கள்

    யுவன் குறித்து ‘லவ் டுடே’ இயக்குநர் போட்ட பதிவு; கடுப்பில் ரசிகர்கள்

    யுவன் குறித்த ‘லவ் டுடே’ திரைப்பட இயக்குநரின் பதிவொன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. 

    ‘கோமாளி’ திரைப்படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதன் இந்தத் திரைப்படத்தை இயக்கி நாயகனாக நடித்துள்ள திரைப்படம்தான், லவ் டுடே. சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக தயாராகியுள்ள ‘லவ் டுடே’ திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக இவானா நடித்துள்ளார்.

    இத்திரைப்படத்தில் சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளனர். லவ் டுடே-விற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மாபெரும் வெற்றியடைந்துள்ள ‘லவ்-டுடே’ திரைப்படத்திற்கு திரைப்பட கலைஞர்கள் பலர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 

    இப்படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய பக்கபலமாக இருந்தது யுவனின் இசையில் உருவான பாடல்கள் என்று ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், லவ் டுடே திரைப்படத்தின் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் முகநூல் பக்கத்தை துழாவி, அதில் யுவனை குறிப்பிட்டு அவர் பதிவிட்டிருக்கும் பழைய பதிவை கண்டறிந்துள்ளார். அந்த பதிவு தற்போது வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

    யுவன் சங்கர் ராஜா

    அந்த பதிவில், ‘யுவன் ஒரு வேஸ்ட் ..ஃப்ராடு’ என பதிவிடப்பட்டுள்ளது. மேலும், மற்றொரு பதிவில் யுவனின் மங்காத்தா பின்னணி இசை காப்பியடிக்கப்பட்டது என்கிற யூடியூப் வீடியோ ஒன்றை பிரதீப் ரங்கநாதன் பகிர்ந்துள்ளார். 

    இதைக் கண்ட யுவன் ரசிகர்கள் தற்போது பிரதீப் ரங்கநாதனை திட்டி வருகின்றனர்.

    இதையும் படிங்கசர்வதேச சட்ட விதி மீறல்கள்: ஐ.நா சபையில் ரஷ்யாவுக்கு எதிராக தீர்மானம்…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....