Monday, April 29, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்உலகின் மிக ஆடம்பரமான நட்சத்திர விடுதியில் ஒருநாள் வாடகை எவ்வளவு தெரியுமா?

    உலகின் மிக ஆடம்பரமான நட்சத்திர விடுதியில் ஒருநாள் வாடகை எவ்வளவு தெரியுமா?

    துபாயில் உலகின் மிக ஆடம்பரமான நட்சத்திர விடுதியில் தங்க ஒருநாள் வாடகையாக 82 லட்சம் வசூலிக்கப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    சுற்றலா பயணிகள் அதிகம் செல்லும் முக்கிய நகரங்களில் துபாய் நகரம் முக்கிய சுற்றுலா நகரமாக இருந்து வருகிறது. அதற்கு காரணம் இங்கு சுற்றி பார்க்கவும் வியக்கவும் வைக்க நிறைய இடங்கள் உள்ளன. அந்த வகையில் துபாய்க்கு ஓராண்டில் சுமார் 70 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்வதாக அந்நாட்டு சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது. 

    துபாயில் முக்கிய சுற்றுலா தலமாக பார்க்கப்படுவது புர்ஜ் கலீபா. இதற்கடுத்து படியாக தற்போது ‘அட்லாண்டிஸ் தி ராயல்’ என்ற நட்சத்திர விடுதியும் சேர்ந்து இருக்கிறது. பார்ப்பதற்கு கண்களை கவரும் இந்த விடுதியில் நுழைவு வாயில் முதல் குளியல் அறையில் இருக்கும் அனைத்து பொருள்களும் விலை உயர்ந்தவை ஆகும். 

    இந்த நட்சத்திர விடுதியில் ஒருநாளை வாடகை 1000 டாலர் முதல் 1 லட்சம் டாலர் வரை வசூலிக்கப்படுகிறது. இந்திய மதிப்பில் 82 ஆயிரம் முதல் 82 லட்சம் வரை இதன் மதிப்பு சொல்லப்படுகிறது. 

    தற்போது துபாயில் இருக்கும் இந்த ‘அட்லாண்டிஸ் தி ராயல்’ என்ற நட்சத்திர விடுதி உலகின் ஆடம்பர நட்சத்திர விடுதியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    தொடக்க பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து காலை சிற்றுண்டி சாப்பிட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....