Sunday, April 28, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்நாங்க பொண்ணு தரோம்.. கல்யாணம் பண்ண நீங்க ரெடியா? ராகுலை வெட்கப்பட வைத்த குமரி பெண்கள்

    நாங்க பொண்ணு தரோம்.. கல்யாணம் பண்ண நீங்க ரெடியா? ராகுலை வெட்கப்பட வைத்த குமரி பெண்கள்

    ராகுல் காந்தியின் நடைபயணத்தின் போது பெண் ஒருவர், தங்கள் வீட்டு பெண்ணை திருமணம் செய்து வைப்பதாகக் கூறியது நெகிழ்ச்சியான சம்பவமாக மாறியுள்ளது. 

    முன்னாள் காங்கிரஸ் தலைவரும் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி இந்தியாவின் ஒற்றுமைக்கான நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

    இந்நிலையில், நேற்று முன்தினம் (செப்டம்பர் 10) நடைபயணத்தின் போது மிகவும் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.

    இது குறித்து ராகுல் காந்தி நடைபயணத்தில் அவருடன் இருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ், செப்டம்பர் 10 அன்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில்,

    ‘ராகுல் காந்தி கன்னியாகுமாரியின் மார்த்தாண்டம் பகுதியில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுடன் பேசினார். அப்போது அங்கிருந்த பெண் ஒருவர், “தமிழகத்தை நீங்கள் எந்த அளவிற்கு நேசிக்கிறீர்கள் என்பது எங்களுக்கு தெரியும். அதனால், எங்கள் வீட்டு தமிழ்ப் பெண்ணை, உங்களுக்கு திருமணம் செய்து வைக்க தயாராக இருக்கிறோம்” என்று கூறினார். இதற்கு ராகுல் காந்தி, ஆச்சிரியத்தில் மூழ்கினார் என குறிப்பிட்டுள்ளார். 

    இந்தக் குறிப்போடு, ராகுல் காந்தி 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் பெண்களுடன் பேசும் புகைப்படத்தையும், அவர் புல் தரையில் அமர்ந்து ஓய்வெடுக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.

    இதையும் படிங்க: அண்ணாமலை காலில் விழுந்த விவகாரம்; கலாய்க்காதீங்க.. என மாணவி வருத்தம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....