Saturday, April 27, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்'கையாடல் செய்த ஓபிஎஸ்சிடம்... சாவி கொடுக்க முடியாது' எடப்பாடி உச்சநீதிமன்றத்தில் பதில் மனு

    ‘கையாடல் செய்த ஓபிஎஸ்சிடம்… சாவி கொடுக்க முடியாது’ எடப்பாடி உச்சநீதிமன்றத்தில் பதில் மனு

    அதிமுக தலைமை அலுவலத்தின் சாவி ஒப்படைப்பு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு இன்று தில்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

    அ.தி.மு.க-வில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே மோதல் முற்றிய நிலையில் கடந்த மாதம் 11-ம் தேதி ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் தொண்டர்கள் இரண்டு பிரிவுகளாக மோதிக்கொண்டனர்.

    இந்த மோதல் சம்பவத்தை அடுத்து அ.தி.மு.க. அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டு, அது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து உயர்நீதிமன்றம் நீதிபதி சதீஷ்குமார் விசாரணை நடத்தி தலைமை கழகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றியதோடு, அ.தி.மு.க. அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க உத்தரவிட்டிருந்தது.

    இதனையடுத்து அதிமுக அலுவலக சாவியை எடப்பாடியிடம் வழங்கியதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கடந்த மாதம் 4-ம் தேதி அன்று தில்லி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனு தொடர்பான வழக்கு விசாரணை கடந்த 18-ம் தேதி அன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் கையில் சாவி ஒப்படைக்க கூறி சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்யுமாறு ஓபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது. இதற்கு பிறகு அதிமுக தலைமை அலுவலக சாவி ஒப்படைப்பு விவகாரத்தில் தடை விதிக்க மறுத்த உச்சநீதிமன்றம், இந்த விஷயத்தில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் வருவாய்த்துறை சார்பில் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.

    இந்த உத்தரவு பிறப்பித்து ஏறக்குறைய ஒரு மாதம் ஆகும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் வருவாய்த் துறையினர் தரப்பில் இருந்து நேற்று (செப்-11) பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ‘‘ஓ.பி.எஸ் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் இல்லை. அதனால், அவர் அதிமுகவின் அதிகார உரிமையை கோர முடியாது. ஓ.பி.எஸ்சை பொறுத்தவரை பணம் கையாடல் செய்திருக்கிறார். வன்முறை சம்பவங்கள் நடைபெற தூண்டுதலாகவும் இருந்திருக்கிறார். எனவே கையாடல் மற்றும் வன்முறை சம்பவங்கள் நடைபெற காரணமாக இருந்த ஒருவரிடம் அலுவலக சாவியை ஒப்படைப்பது என்பது யோசிக்க வேண்டிய ஒன்று. எனவே, ஓ.பி.எஸ் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதேபோல் தென்சென்னை வருவாய் கோட்டாச்சியர் சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில், அதிமுக தலைமை அலுவலகத்திலும், அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதிமுக அலுவலக சாவியை ஒப்படைத்தது என்பது சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உட்பட்டது என்று கூறப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் மூன்று வார இடைவெளிக்கு பிறகு இந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெறுகிறது. கடந்த முறை நடைபெற்ற வழக்கு விசாரணையில் சரியான முகாந்திரம் எதுவும் இல்லாமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறி இருந்தது. இதைத் தொடர்ந்து இன்று அதிமுக அலுவலக சாவி தொடர்பான விரிவான விசாரணை இன்று நடைபெற உள்ளது.

    இதில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் தங்கள் தரப்பு வாதங்களை எடுத்து வைக்க உள்ளனர். இவர்களோடு வருவாய் துறை அதிகாரிகளும் பதில் அளிக்க தயாராக உள்ளனர். இந்த நிகழ்வு அதிமுக தொண்டர்களிடையே மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....