Saturday, May 4, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுசாலை விபத்துகளில் சென்னை முதலிடம்; தமிழகத்துக்கு எத்தனையாவது இடம்?

    சாலை விபத்துகளில் சென்னை முதலிடம்; தமிழகத்துக்கு எத்தனையாவது இடம்?

    இந்தியாவில் சாலை விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகளில் உத்தரபிரதேசம் மாநிலம் முதல் இடத்தில் உள்ளது. 

    நாடு முழுவதும் கடந்த ஆண்டு ஒவ்வொரு மாநிலத்திலும் நடந்த போக்குவரத்து விபத்துகளும் அதனால், ஏற்பட்ட உயிரிழப்புகளின் அடிப்படையிலும் பட்டியல் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. 

    தேசிய குற்ற ஆவண பிரிவு பதிவு செய்துள்ள தகவல்கள் அடிப்படையில் இப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. 

    அதன்படி, நாடு முழுவதும் 4 லட்சத்து 22,659 போக்குவரத்து விபத்துகள் நடந்துள்ளன. இது முந்தைய ஆண்டை விட (3 லட்சத்து 68 ஆயிரம்) மிக அதிகம் ஆகும். 

    இந்த போக்குவரத்து விபத்துகள் மூலம் அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 24,711 பேர் உயிரிழந்தனர். இதன்காரணமாக, உத்தரபிரதேச மாநிலம் சாலை விபத்துகளில் முதலிடம் பிடித்துள்ளது. 

    இதைத்தொடர்ந்து, 16,685 உயிரிழப்புகளுடன் தமிழகம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இது மொத்த உயிரிழப்புகளில் 9.6 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தை தொடர்ந்து 3-வது இடத்தில் மராட்டியம் உள்ளது. 

    தமிழகத்தில் 2021-ம் ஆண்டு மட்டும் சாலை விபத்து வழக்குகள் 22.4 சதவீதம் அதிகரித்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது. 

    மேலும் தமிழ்நாட்டில், 2020-ம் ஆண்டு 46,443 ஆக இருந்த போக்குவரத்து விபத்துகள் எண்ணிக்கை 2021-ம் ஆண்டு 57,090 ஆக அதிகரித்துள்ளது.

    அதேபோல், போக்குவரத்து விபத்துகளில் நகரங்கள் பட்டியலில், மூன்றாவது முறையாக சென்னை நகரம் முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    கூகுள் மேப் பார்த்தபடி சென்று வெள்ளத்தில் சிக்கிய குடும்பம் 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....