Friday, May 3, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுதன்னை நிரூபித்த கோலி; அபார வெற்றி பெற்ற இந்தியா...

    தன்னை நிரூபித்த கோலி; அபார வெற்றி பெற்ற இந்தியா…

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா 101 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வென்றது. 

    ஜக்கிய அரபு எமிரெட்ஸில் இருபது ஓவர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்றைய ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. 

    இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான், இந்தியாவை பேட் செய்ய அழைத்தது. ஆசியக் கோப்பை தொடரில் இறுதிப்போட்டி என்பதால் பல்வேறு மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டிருந்தன. அதன்படி, பிளேயிங் லெவனைப் பொருத்தவரை, இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு ஓய்வளிக்கப்பட்டு கே.எல்.ராகுல் அந்தப் பொறுப்பை ஏற்றிருந்தார். தீபக் சஹர், அக்ஸர் படேல், தினேஷ் கார்த்திக் ஆகியோரும் பிளேயிங் லெவனில் இணைந்திருந்தனர்.

    இந்திய இன்னிங்ஸை தொடங்கிய ராகுல் – கோலி கூட்டணி முதல் விக்கெட்டுக்கே 119 ரன்கள் சேர்த்து அசத்தியது. அதில் ராகுல் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 62 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். 

    இதைத்தொடர்ந்து வந்த சூர்யகுமார் யாதவ் 1 சிக்ஸருடன் நடையைக் கட்டினார். தொடர்ந்து வந்த ரிஷப் பந்த் அவ்வப்போது மட்டும் ஆடி, கோலிக்கு வழிவிட்டார். இதனால் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் ஆப்கானிஸ்தானின் பந்துவீச்சை சிதறடித்தார், கோலி. 

    இருபது ஓவர்கள் முடிவில் கோலி 12 பவுண்டரிகள், 6 சிக்ஸர்களுடன் 122 ரன்களுக்கும், பந்த் 3 பவுண்டரிகளுடன் 20 ரன்களுக்கும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். மொத்தத்தில் இந்திய அணி 212 ரன்கள் எடுத்தது. 

    இதையடுத்து, 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியினரின்  விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. இதனால், ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 111 ரன்களே எட்டியது.

    ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மென்களுள் இப்ராஹிம் ஜர்தான் மட்டும் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 64 ரன்கள் விளாசி இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ரஷீத் கான் 2 பவுண்டரிகளுடன் 15, முஜீப் உர் ரஹ்மான் 2 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 18 ரன்கள் சேர்க்க, எஞ்சிய விக்கெட்டுகள் ஒற்றை இலக்க ரன்னுடனும், ரன் ஏதும் எடுக்காமலும் பெவிலியான் திரும்பினர்.  

    இந்திய பந்துவீச்சைப் பொறுத்தவரையில் புவனேஷ்வர் குமார் 5 விக்கெட்டுகள் சாய்த்து அசத்த, அர்ஷ்தீப் சிங், ரவிச்சந்திரன் அஸ்வின், தீபக் ஹூடா ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

    ஆசியக் கோப்பை தொடரில் இருந்து இந்திய அணி வெளியேறியது. இது ரசிகர்களுக்கு வருத்தத்தை தந்தது. ஆனால், இந்த வருத்தத்துக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் கோலியின் ஆட்டம் இருந்தது. 

    ஆம், இந்திய இன்னிங்ஸில் அட்டகாசமாக விளையாடிய கோலி, சுமார் இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச களத்தில் சதம் அடித்து, தகுந்த ஃபார்மை எட்டாததற்காக சந்தித்து வந்த பலமான விமர்சனங்களுக்கு பதிலளித்தார். 

    மேலும், விராட் கோலி இந்த சதத்தின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதமடித்தவர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இரண்டாவது இடத்தை ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங்கோடு, விராட் கோலி பகிர்ந்துகொண்டுள்ளார். இருவரும் தலா 71 சதங்கள் அடித்திருக்கிறார்கள். 

    சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதமடித்தவர்களின் பட்டியலில் முதல் இடத்தில் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் 100 சதங்களுடன் முதலிடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    இதையும் படிங்க: இந்தியாவுடன் பாகிஸ்தானை இணைக்க ராகுல் காந்தி முயற்சிக்க வேண்டும் – அசாம் முதல்வர் கருத்தால் சர்ச்சை!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....