Monday, March 18, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்'சினிமாவில் வன்முறைக் காட்சிக்கு எதிர்ப்பு ' - என்ன சொல்கிறது நீதிமன்றம்?

    ‘சினிமாவில் வன்முறைக் காட்சிக்கு எதிர்ப்பு ‘ – என்ன சொல்கிறது நீதிமன்றம்?

    திரைப்படங்களில் புகைப் பிடிக்கும் காட்சிக்கும், மதுக் குடிக்கும் காட்சிக்கும் பஞ்சமில்லை. இக்காட்சிகள் திரையில் தோன்றும் போது, “மதுப்பழக்கம் நாட்டுக்கும், வீட்டுக்கும் கேடு விளைவிக்கும்” மற்றும் “புகைப்பிடிப்பது புற்றுநோயை உண்டாக்கும்” போன்ற எச்சரிக்கை வாசகங்கள் சிறிய எழுத்துக்களில் கீழ்ப்புறமாக, காண்பிக்கப்படும். இதைப்போலவே, சண்டைக் காட்சிகள் திரையில் தோன்றும் போது, எச்சரிக்கை வாசகங்கள் திரையில் காண்பிக்கப்பட வேண்டும் என சென்னையைச் சேர்ந்த, வழக்கறிஞர் கோபி கிருஷ்ணன் என்பவர் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

    கோபி கிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவில், இன்றைய இளம் தலைமுறையினர், வன்முறை, கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. முக்கியமாக திரைப்பட காட்சிகளை பார்த்து தான், அச்செயல்களை நிஜ வாழ்க்கையில் அரங்கேற்றி வருகின்றனர். சினிமாவில் திரைப்பட நடிகர்கள் பேசுவதை அப்படியே நம்பி, அவர்களின் ரசிகர்கள் அவற்றை பின்பற்றி வருகின்றனர்.

    ஆனால், நடிகர்கள் பணத்திற்காக நடிக்கிறார்கள் என்பதை எந்தவொரு ரசிகரும் உணரவில்லை என்பது வருத்தமளிக்கிறது. ஆகவே, புகைப்பிடிப்பதும், மது அருந்துவதும் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என, எச்சரிக்கை வாசகங்கள் இருப்பது போல, திரைப்படங்களில் தோன்றும் வன்முறை காட்சிகளின் போதும், ‘இக்காட்சியில் பயன்படுத்தும் கத்தி மற்றும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள், காகிதத்தால் செய்யப்பட்டவை; கலர் தண்ணீர், இரத்தமாக காட்டப்படுகிறது’ என்ற எச்சரிக்கை வாசகங்கள் இடம் பெற வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

    இந்த மனு, தலைமை நீதிபதி எம்.என். பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அடங்கிய ‘முதல் பெஞ்ச்’ முன், விசாரணைக்கு வந்தது. திரைப்படக் காட்சிகளை பார்த்து விட்டு தான், பள்ளி மாணவர்கள் கத்தி மற்றும் அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் வலம் வருவதாக, மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    மனுதாரரின் வாதத்திற்கு என்ன ஆதாரம் உள்ளது? என, கேள்வி எழுப்பியது முதல் பெஞ்ச். பிறகு, ஆதாரம் இல்லாத காரணத்தால், மனுதாரருக்கு அபராதம் விதித்து, வழக்கைத் தள்ளுபடி செய்யப் போவதாக நீதிபதிகள் எச்சரித்தனர். அதனைத் தொடர்ந்து, மனுவை வாபஸ் பெறுவதாக, மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. உரிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால், இந்த வழக்கை தள்ளுபடி செய்து, முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.

    வழக்கை முதல் பெஞ்ச் தள்ளுபடி செய்தாலும், தமிழகத்தில் நடக்கும் பல குற்ற சம்பவங்களுக்கு திரைப்படங்களும் ஒரு காரணம் என்பதை நாம் மறுக்க முடியாது. ஏனெனில், சென்னையில் நிகழ்ந்த ஒரு செயின் பறிப்பு வழக்கில், திரைப்படத்தை பார்த்து தான் நாங்கள் இதைச் செய்தோம் என குற்றவாளிகளே ஒப்புக் கொண்ட செய்திகளையும் நாம் பார்த்துள்ளோம். ரசிகர்கள் உண்மை நிலையை புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். ரசிகர்கள், திரைப்படங்களில் காட்டப்படும் நல்ல விஷயங்களை மட்டும் உள்வாங்கி கொண்டு, பொழுதுபோக்கிற்காக பார்ப்பது மட்டுமே நன்மை பயக்கும்.

    சாதி விட்டு சாதி திருமணம்; தீர்ப்பு வந்த கண்ணகி மற்றும் முருகேசன் ஆணவக்கொலை வழக்கு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....