Thursday, May 2, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஉலக மல்யுத்த சாம்பியன்ஷிப் - இந்திய வீராங்கனை அதிர்ச்சி தோல்வி!

    உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் – இந்திய வீராங்கனை அதிர்ச்சி தோல்வி!

    செர்பியாவில் நடைபெறும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை வினேஷ் போகாட் தகுதிச்சுற்றிலேயே தோல்வி கண்டார்.

    வினேஷ் போகாட் சமீபத்தில் நிறைவடைந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றார். இதனால் இவரின் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருந்தது. 

    இந்நிலையில், செர்பியாவில் நடைபெறும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இவர் கலந்துக்கொண்டார். இந்த சாம்பியன்ஷிப்பில் மகளிருக்கான 53 கிலோ எடைப் பிரிவில் வினேஷ் போகாட் பங்குபெற்றார். 

    இதையும் படிங்க: மைதானத்தில் மட்டுமல்ல…சமூக ஊடகங்களிலும் முன்னிலை வகிக்கும் கோலி

    எதிர்பார்பை ஏற்படுத்திய இவர் மங்கோலியாவின் குலான் பத்குயாக்கிடம் தோல்வியைத் தழுவினார். வினேஷை வீழ்த்திய இதே குலானை, இந்தியாவின் ஜூனியர் மல்யுத்த வீராங்கனை அன்டிம் கடந்த மாதம் 23 வயதுக்கு உள்பட்டோருக்கான ஆசிய மீட்டில் வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    ஆனால், அன்டிம் இந்த உலக சாம்பியன்ஷிப்புக்கான தேர்வுப் போட்டியில் வினேஷிடம் தோல்வி கண்டார். 

    இப்போட்டியில் முன்னதாக வெள்ளி வென்ற இந்தியாவின் அன்ஷு மாலிக் தற்போது பங்கேற்காததாலும், நடப்புச் சாம்பியனான ஜப்பானின் அகாரி ஃபுஜ்னாமி காயம் காரணமாக விலகியதாலும் வினேஷ் சாம்பியனாவார் என கணிக்கப்பட்ட நிலையில், அவர் தகுதிச்சுற்றிலேயே அதிர்ச்சித் தோல்வி கண்டார்.

    சூழல் ஜாம்பவான் வார்னேவுக்கு புகழ் அஞ்சலி – நினைத்து உருகிய சச்சின்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....