Saturday, April 27, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுவிநாயர் சதுர்த்தி: கொடியேற்றத்துடன் பிள்ளையார்பட்டியில் விழா தொடங்கியது

    விநாயர் சதுர்த்தி: கொடியேற்றத்துடன் பிள்ளையார்பட்டியில் விழா தொடங்கியது

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு அருகே உள்ள பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில், விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு அருகில் உள்ள பிள்ளையார்பட்டியில் இருக்கும் கற்பக விநாயகர் கோவில், மிகவும் பிரசித்தி பெற்றதாகும். விநாயகருக்காக கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி திருவிழா ஆண்டு தோறும் இங்கு வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி, வரும் ஆகஸ்ட் 31ம் தேதி வருகிறது. இதையடுத்து, விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் பிள்ளையார்பட்டியில் தொடங்கப்பட்டு வருகின்றன. இதன் முதற் கட்டமாக நேற்று பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் கொடியேற்றம் நடத்தப்பட்டது.

    இதையொட்டி, நேற்று காலை சண்டிகேஸ்வரர் சந்நிதியில் இருந்து கொடி புறப்பட்டு, கோவிலை வலம் வந்தது. இதைத்தொடர்ந்து, கொடிமரம் அருகே உற்சவ விநாயகர், சண்டிகேஷ்வரர், அங்குசத் தேவர் ஆகியோர் எழுந்தருளினர்.

    கொடி ஸ்தாபித்தல் பூஜைகளுக்குப் பின்னர், கொடியேற்றம் நடந்தது. நேற்று இரவு மூஷிக வாகனத்தில் விநாயகர் வீதியுலா நடைபெற்றது. இந்த வீதியுலாவில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    இதைத்தொடர்ந்து 10 நாட்கள் விமரிசையாக நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவில், இன்று (ஆகஸ்ட் 23) முதல் வரும் 29ம் தேதி வரை தினமும் காலை வெள்ளிக் கேடகத்திலும், இரவு சிம்மம்,பூத, கமல, ரிஷப, மயில், குதிரை, யானை, வாகனங்களிலும் வீதியுலா நடைபெற உள்ளது.

    வரும் 27ம் தேதி மாலை கஜமுக சூரஸம்ஹாரமும், 30ம் தேதி காலை அலங்கரிக்கப்பட்ட தேரில் விநாயகர் எழுந்தருளல் நிகழ்ச்சியும், 30ம் தேதி மாலை விநாயகர் சந்தனக்காப்பு அலங்காரத்திலும் எழுந்தருள உள்ளார்.

    இந்த நிகழ்ச்சிகளைத்தொடர்ந்து, ஆகஸ்ட் 31ம் தேதி விநாயகர் தினத்தன்று காலை தங்க மூஷிக வாகனத்தில் விநாயகர் எழுந்தருளல், அங்குச தேவருக்கு தீர்த்தவாரி, பிற்பகலில் மூலவருக்கு முக்குறுணி கொழுக்கட்டை படையல், இரவு பஞ்சமூர்த்திகள் வீதியுலா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

    Also read : எந்த விநாயகர் சிலைகளை பயன்படுத்த வேண்டும் – தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....