Friday, May 3, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்OTT-யில் வெளியாகிறது "விக்ரம்" திரைப்படம்; தேதி அறிவிப்பு!

    OTT-யில் வெளியாகிறது “விக்ரம்” திரைப்படம்; தேதி அறிவிப்பு!

    திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் விக்ரம் திரைப்படம் OTT-யில் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

    கமல்ஹாசன் தயாரித்து நடித்துள்ள திரைப்படம் விக்ரம். இந்த மாதம் ஜூன் 3-ம் தேதி வெளியாகி ரசிகர்களையும் பொதுமக்களையும் கவர்ந்தது.  இப்படத்தினை லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கி இருந்தார்.

    விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், அர்ஜுன் தாஸ் ஆகியோரும் இத்திரைப்படத்தில் முக்கிய கதாபத்திரங்களில் நடித்திருந்தனர். மேலும், நடிகர் சூர்யா இப்படத்தில் குணச்சித்திர வேடத்தில் இறுதியாக ரோலக்ஸ் ஆக வந்து அசத்தியிருந்தார். விக்ரம் படத்திற்கு, இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். மேலும் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் மாபெரும் வெற்றியை கொடுத்தன. 

    விக்ரம் திரைப்படம் வெளியாகி நான்கு வாரங்கள் ஆகிய நிலையில், பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. குறிப்பாக பிரிட்டன், ஐக்கிய அரபு நாடுகள், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் அதிக வசூலித்த தமிழ்ப்படம் என்ற சாதனையை விக்ரம் படைத்தது. தற்போது, உலகம் முழுவதும் 400 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    விக்ரம் திரைப்படம் வெளியாகி ஒரு மாதக் காலம் ஆகிய பிறகும், இப்படத்தின் மீதான ஈர்ப்பு இரசிகர்கள் மத்தியில் சற்றளவும் குறையவில்லை என்பதே உண்மை. இத்திரைப்படத்தின் பாடல்களும் வசனங்களும் படம் பார்த்த அனைவரிடமும் ஏதோ ஒரு வகையில் ஒட்டிக் கொண்டுள்ளது. 

    இந்நிலையில், விக்ரம் திரைப்படம் OTT-யில் வெளியாகும் என்று டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. தொடர்ந்து, வருகின்ற ஜூலை மாதம் 8 ஆம் தேதி விக்ரம் திரைப்படம் OTT-யில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை, கமல் ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும் பகிர்ந்துள்ளது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....