Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்மோடியை கட்டியணைத்த துபை அதிபர்!

    மோடியை கட்டியணைத்த துபை அதிபர்!

    ஜி7 மாநாட்டில் கலந்துகொள்ள, கடந்த  26 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மனியில் உள்ள ஸ்க்லோஸ் எல்மாவிற்கு சென்றார். ஜி7 மாநாடு முடிந்த பிறகு, ஒரு நாள் அரசு முறைப் பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் சென்றார் பிரதமர் மோடி. நுபுர் ஷர்மா விவகாரத்திற்குப் பிறகு, முதல் முறையாக பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சென்றுள்ளார். அந்நாட்டு அதிபர் ஷேக் முகமது பின் ஜயித் அல் நயான் விமான நிலையத்திற்கே வந்து பிரதமர் மோடியை வரவேற்றார்.

    இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரக நாடுகள் பல வருடங்களாக வர்த்தக தொடர்பை வைத்துள்ளது. அமெரிக்காவிற்குப் பிறகு ஐக்கிய அரபு அமீரகத்தின் 2 வது மிகப்பெரிய வர்த்தக பங்குதாரர் நாடு இந்தியா தான். மேலும், 34 இலட்சம் இந்தியர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்கி வேலை செய்து வருகின்றனர். கடைசியாக பிரதமர் மோடி, 2019 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம், ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருதான, ‘Order of Zayed’ என்ற விருதினை வாங்கச் சென்றார்.

    ஜெர்மனியில் நடந்த ஜி7 மாநாட்டில் பங்கேற்ற பிறகு, பிரதமர் மோடி, அங்கிருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சென்றார். அந்நாட்டின் முன்னாள் அதிபராக இருந்த ஷேக் காலிபா பின் சயித் அல் நஹ்யான் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்க அபுதாபி சென்றார் பிரதமர் மோடி.

    அபுதாபி விமான நிலையத்தில் பிரதமர் மோடியை, ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் முகமது பின் ஜயீத் அல் நஹ்யான் நேரில் வந்து கட்டியணைத்து வரவேற்றார். இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளரான அரிந்தம் பக்சி தெரிவிக்கையில், இது மிகவும் சிறப்பான வரவேற்பு. அதிபர் மற்றும் அவரது குடும்பத்தினர் விமான நிலையத்திற்கே வந்து, அங்கேயே ஆலோசனையும் நடத்தினர் என்றார்.

    இருநாட்டுத் தலைவர்கள் சந்திப்பின் போது, அதிபராக இருந்த ஷேக் காலிபா பின் சயித் அல் நஹ்யான் மறைவுக்கு, மோடி தனது இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார். பிறகு, இரு தரப்பு உறவுகள், வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இருநாட்டுத் தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.

     

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....