Monday, April 29, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்விஜய்யின் லியோ பட படப்பிடிப்பில் தீவிர கட்டுப்பாடு - உஷாரான படக்குழு!

    விஜய்யின் லியோ பட படப்பிடிப்பில் தீவிர கட்டுப்பாடு – உஷாரான படக்குழு!

    விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் லியோ படத்தின் படப்பிடிப்புகளில் தீவிர கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. 

    நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் டைட்டில் புரோமோ சமீபத்தில் வெளியாகி அதிகளவில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. 

    லியோ படத்தில் நடிகர் விஜய்யுடன், அர்ஜூன், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், த்ரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மேத்யூ தாமஸ் மற்றும் மன்சூர் அலிகான் போன்றோர் நடித்து வருகின்றனர். லியோ படமானது தமிழ் சினிமா ரசிகர்கள் அதிகளவில் எதிர்பார்க்கும் படங்களின் பட்டியலில் முதன்மையாக உள்ளது. 

    இப்படத்தின் ஒவ்வொரு அப்டேட்டுகளும் இணையத்தில் வைரலாகின. ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பிற்காக விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் காஷ்மீர் செல்லும் வீடியோ சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக படக்குழுவால் வெளியிடப்பட, அந்த வீடியோவும் இணையத்தில் வைரலானது. படப்பிடிப்பும் விறுவிறுப்பாக காஷ்மீரில் நடைபெற்று வந்தது. 

    இந்நிலையில், காஷ்மீரில் நடைபெற்று வரும் லியா படத்தின் படப்படிப்பில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.  நடிகர்கள், நடிகைகள், தொழிநுட்பக் கலைஞர்கள், தொழிலாளர்கள் என யாரும் படப்பிடிப்பு தளத்திற்கு செல்போன்களைக் கொண்டு வரக்கூடாது என கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனைக் கண்காணிக்க தனி குழுவையும் படக்குழுவினர் ஏற்பாடு செய்துள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. 

    சில தினங்களுக்கு முன்னர் லியோ படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து விஜய் தொடர்பான காட்சிகள் இணையத்தில் கசிந்து படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதன் காரணமாகவே லியோ படப்பிடிப்பில் இப்படியான கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது. 

    ‘வாத்தி’ எங்களை இழிவுபடுத்துகிறது; தனுஷ் படத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....