Tuesday, April 30, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஓடும் ரயிலில் உயிருக்கு கெஞ்சிய திருடன்! ஜன்னலில் தொங்கவிட்டு 'அல்லு கிளப்பிய' பயணிகள்...

    ஓடும் ரயிலில் உயிருக்கு கெஞ்சிய திருடன்! ஜன்னலில் தொங்கவிட்டு ‘அல்லு கிளப்பிய’ பயணிகள்…

    ரயிலில் தொங்கவிடப்பட்ட திருடர்கள் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    வட மாநிலத்தில் லைலாக் மற்றும் கோகா ரயில் நிலையத்திற்கு நடுவே ஜமால்பூர் முதல் சாஹிப்கஞ்ச் ரயில் சென்றுக் கொண்டிருக்கையில் ஒருவர் பயணியிடமிருந்து மொபைல் போனை பறிக்க முயன்றுள்ளார். அப்போது, பயணிகளிடம் அந்த நபர் பிடிபட்டுள்ளார். இதே போல நிகழ்வில் திருடர்கள் குழுவொன்று கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளது. 

    ஆனால், ஒரு திருடன் மட்டும் மாட்டிக்கொள்ள மற்றவர்கள் தப்பியோடிவிட்டனர். வேகமாக சென்ற ரயிலில் தொங்கிக்கொண்டிருந்த அவரின் கைகளையும், சட்டையையும் பயணிகள் பிடித்துள்ளனர். தனது கைகளை விட்டுவிட வேண்டாம் என திருடர் கெஞ்சியுள்ளார். வ

    மற்ற பெர்த்தில் இருந்த பயணிகள் இந்தச் சம்பவத்தை படம் பிடித்தனர். ஆத்திரமடைந்த மற்ற பயணிகள் திருட வந்தவரை உள்ளே இழுத்து வந்து அறைந்து அடி கொடுத்துள்ளனர். 

    முன்னதாக, கடந்த செப்டம்பர் மாதம் 14-ம் தேதி மொபைல் போனை திருட முயற்சித்தபோது, ரயில் நகர தொங்கிவிட்டது. இதைத்தொடர்ந்து, ஓடும் ரயிலின் ஜன்னலில் தொங்கியபடி திருடன் பயணிகளிடம் பிடிபட்டார். தன்னை கீழே விட்டு விட வேண்டாம் என கெஞ்சியபடியே திருடன் ரயிலில் பயணம் செய்துள்ளார். 

    இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த வீடியோக்கள் தொடர்பான பல கருத்துகள் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு வருகிறது.

    இதையும் படிங்க: ரூ.29 ஆயிரம் கோடியில் புதிய திட்டங்கள்! குஜராத் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....