Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுதுணை வேந்தர் நியமன மசோதா குறித்து விளக்கம் கேட்ட ஆளுநர்

    துணை வேந்தர் நியமன மசோதா குறித்து விளக்கம் கேட்ட ஆளுநர்

    துணை வேந்தர் நியமன மசோதா தொடர்பாக விளக்கம் அளிக்க கோரி தலைமைச் செயலருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம் எழுதியுள்ளார். 

    தமிழகத்தில் பல்கலைக்கழக துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்க வகை செய்யும் மசோதா கடந்த ஏப்ரல் மாதம் 25-ம் தேதி சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. 

    இதைத்தொடர்ந்து, துணை வேந்தர் நியமனம் தொடர்பான மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. இந்நிலையில், நான்கு மாதங்களாக இந்த மசோதாவின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் நிலுவையில் வைக்கப்பட்டிருந்தது. 

    இந்நிலையில், தமிழக அரசின் துணை வேந்தர் நியமன மசோதா தொடர்பாக விளக்கம் அளிக்க கோரி தலைமைச் செயலருக்கு ஆளுநர் ஆர்.என். ரவி கடிதம் எழுதியுள்ளார். 

    மேலும் துணைவேந்தர்களை அரசே நியமனம் செய்வது அரசியல் தலையீட்டுக்கு வழிவகுக்கும் என்றும் தலைமைச் செயலருக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி குறிப்பிட்டுள்ளார். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....