Saturday, May 4, 2024
மேலும்
    Homeசெய்திகள்பொங்கல் பண்டிக்கைக்கு 15 நிறத்திலான புதிய வடிவமைப்பில் வேட்டி சேலைகள்: தமிழக அரசு

    பொங்கல் பண்டிக்கைக்கு 15 நிறத்திலான புதிய வடிவமைப்பில் வேட்டி சேலைகள்: தமிழக அரசு

    15 நிறத்திலான புதிய வடிவமைப்பில் பொங்கல் பண்டிக்கைக்கு வேட்டி சேலைகளை, குடும்ப அட்டை தாரர்களுக்கு தமிழக அரசு வழங்க உள்ளது.

    பொது மக்கள் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாட இலவச வேட்டி, சேலை வழங்குவதற்காக முதல்கட்டமாக 243.96 கோடி ரூபாயை உற்பத்திக்காக ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டை வைத்துள்ள பொது மக்களுக்கு வேட்டி, சேலை, வழங்குவது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா வேட்டி , சேலை தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.
    2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு 1.80 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி மற்றும் சேலைகள் வழங்கபட உள்ளது, மேலும் 10 ஆண்டுகளுக்கு பிறகு 15 வண்ண டிசைன்களில் வேட்டி சேலைகள் வழங்கபட உள்ளது, பெண்களுக்கு 10 புதிய வகையில் வடிவமைக்கபட்ட சேலைகளும். ஆண்களுக்கு 5 வண்ணங்களில் வடிவமைக்கபட்ட வேட்டிகள் வழங்கபட உள்ளது. மேலும் 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் 10ம் தேதிக்குள் பொது மக்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

    பல வண்ணங்களில் வடிவமைக்கபட்ட ஆடைகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வு தரமாக உள்ளதாக என ஆய்வும் செய்தார். அப்போது பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி, தலைமைச் செயலாளர் இறையன்பு, வருவாய் நிருவாக ஆணையர், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர், கைத்தறி துணிநூல் மற்றும் கதர்த்துறை முதன்மைச் செயலாளர், பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர், ஆகியோர் கலந்து கொண்டனர்.

    சம்பா நெற்பயிரை காப்பீடு செய்திடாத விடுபட்ட விவசாயிகளுக்கு கால நீட்டிப்பு: வேளாண்மை-உழவர் நலத் துறை அறிவிப்பு…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....