Thursday, May 2, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்வாரிசு திரைப்படத்தின் புது அப்டேட்...ஜாலி பண்ணும் விஜய்

    வாரிசு திரைப்படத்தின் புது அப்டேட்…ஜாலி பண்ணும் விஜய்

    நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தின் புது அப்டேட் இன்று வெளியாகவுள்ளது.

    பீஸ்ட் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம், வாரிசு. இத்திரைப்படத்தை தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கி வருகிறார். தில் ராஜூ தயாரிக்க, தமன் இத்திரைப்படத்திற்கு இசையமைக்கிறார். 

    வாரிசு திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு என்பது நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே போகிறது. எப்படியாவது பொங்கலுக்கு திரைப்படத்தை ரிலீஸ் செய்துவிட வேண்டும் என்ற முனைப்புடன் படக்குழு விறுவிறுப்பாக படப்பிடிப்புகளை நிகழ்த்தி வருகிறது.

    இந்நிலையில், வாரிசு திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்த அப்டேட் இன்று வெளியாகவுள்ளதாக தகவல் வந்துள்ளது. வெளிவரும் தகவலானது, வாரிசு திரைப்பட பாடல் சார்ந்தவையாகத்தான் இருக்குமென ரசிகர்கள் கணித்து வைத்துள்ளனர். மேலும், வாரிசு திரைப்படத்தில் விஜய் ஜாலியாக ஒரு பாடல் பாடியிருப்பதாகவும், அப்பாடல்தான் தீபாவளியை முன்னிட்டு வெளிவர உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    வாரிசு திரைப்படத்தில், பிரபு, பிரகாஷ் ராஜ், ஷியாம், சரத்குமார், சம்யுக்தா, குஷ்பு, யோகிபாபு என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துவருகிறது. மேலும், விஜய்க்கு ஜோடியாக இத்திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். 

    இதையும் படிங்க: சையத் முஷ்டாக் அலி கோப்பை; சண்டிகரை ஆட்டம் காண வைத்த தமிழகம்…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....