Thursday, May 9, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்வாரிசு பட டிரெய்லரின் தாமதத்திற்கு காரணம் என்ன? - வெளிவந்த தகவல்..

    வாரிசு பட டிரெய்லரின் தாமதத்திற்கு காரணம் என்ன? – வெளிவந்த தகவல்..

    வாரிசு திரைப்படத்தின் டிரெய்லர் எதிர்பார்த்தபடி நாளை வெளிவரவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு என்பது நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே போகிறது. பொங்கலுக்கு வாரிசு திரைக்கு வருமென்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வாரிசு திரைப்படத்தின் புரோமஷன் பணிகள் தொடங்கியுள்ளது. 

    மேலும், வாரிசு திரைப்படத்தில் இருந்து சமீபத்தில் வெளிவந்த ‘ரஞ்சிதமே’, ‘தீ தளபதி’ மற்றும் ‘சூல் ஆஃப் தி வாரிசு’ போன்ற பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், சமீபத்தில் வாரிசு திரைப்படத்தின் முழு பாடல்களும் வெளியிடப்பட்டன. 

    இதைத்தொடர்ந்து, வாரிசு திரைப்படத்தின் டிரெய்லர் குறித்த கேள்விகள் இணையத்தை சுற்ற ஆரம்பிக்க, தற்போது அதற்கான பதில் கிடைத்துள்ளது. அதன்படி, வாரிசு திரைப்படத்தின் டிரெய்லர் ஜனவரி 4-ஆம் தேதி வெளிவரவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    ஆனால், தற்போது வரை டிரெய்லர் நாளை வெளியாகும் என்பதற்கான எந்தவித அறிவிப்பும் வெளிவரவில்லை. இதற்கான காரணம் என்னவென்று அனைவரும் கேட்கையில், வாரிசு திரைப்படத்தின் தணிக்கைச் சான்றிதழ் கிடைக்காததே காரணம் என்று கூறப்பட்டுள்ளது. 

    இந்நிலையில், தற்போது வாரிசு திரைப்படத்திற்கு ‘யூ’ சான்றிதழ் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனால், எதிர்பார்த்தபடியே நாளை டிரெய்லர் வெளியாகுமென தகவல்கள் தெரிவிக்கின்றன.

    மேலும், கடந்த 31-ஆம் தேதி வெளிவந்த நடிகர் அஜித்குமாரின் துணிவு திரைப்படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    எரிவாயு சிலிண்டர்களாக மாறிய பலூன்கள்! பாகிஸ்தான் மக்களின் தற்போதைய நிலை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....