Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்இன்று வெளியாகும் துணிவு; வாரிசு எப்போது? - வெளிவந்த தகவல்..

    இன்று வெளியாகும் துணிவு; வாரிசு எப்போது? – வெளிவந்த தகவல்..

    வாரிசு திரைப்படத்தின் டிரெய்லர் ஜனவரி 2-ஆம் தேதி வெளிவரவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு என்பது நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே போகிறது. பொங்கலுக்கு வாரிசு திரைக்கு வருமென்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வாரிசு திரைப்படத்தின் புரோமஷன் பணிகள் தொடங்கியுள்ளது. 

    மேலும், வாரிசு திரைப்படத்தில் இருந்து சமீபத்தில் வெளிவந்த ‘ரஞ்சிதமே’, தீ தளபதி மற்றும் ‘சூல் ஆஃப் தி வாரிசு’ போன்ற பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், சமீபத்தில் வாரிசு திரைப்படத்தின் முழு பாடல்களும் வெளியிடப்பட்டன. 

    இந்நிலையில், வாரிசு திரைப்படத்தின் டிரெய்லர் குறித்த கேள்விகள் இணையத்தை சுற்ற ஆரம்பிக்க, தற்போது அதற்கான பதில் கிடைத்துள்ளது. அதன்படி, வாரிசு திரைப்படத்தின் டிரெய்லர் ஜனவரி 2-ஆம் தேதி வெளிவரவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    நடிகர் அஜித்குமாரின் துணிவு திரைப்படத்தின் டிரெய்லர் இன்று மாலை 7 மணிக்கு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு புதுச்சேரியில் அரசு காலண்டர்… 24 மணி நேரத்தில் அச்சடிப்பு..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....