Saturday, May 4, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்'வாரிசு' படத்தின் முதல் பாடல் இன்று வெளியீடு..! காத்திருக்கும் ரசிகர்களுக்கு இப்பாடல் விருந்தளிக்குமா?

    ‘வாரிசு’ படத்தின் முதல் பாடல் இன்று வெளியீடு..! காத்திருக்கும் ரசிகர்களுக்கு இப்பாடல் விருந்தளிக்குமா?

    நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தின் புது அப்டேட் வெளிவந்துள்ளது. 

    இந்திய நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜய். இவருக்கென்று பெரும் ரசிக பட்டாளமே இருக்கிறது. தற்போது இவர் ‘வாரிசு’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை இயக்குநர் வம்சி இயக்குகிறார். தில் ராஜூ தயாரிக்கிறார். 

    வாரிசு திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு என்பது நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே போகிறது. பொங்கலுக்கு வாரிசு திரைக்கு வருமென்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, படத்தின் அப்டேட்டுகள் குறித்து தொடர்ந்து ரசிகர்கள் கேள்வி எழுப்பிய வண்ணம் இருந்தனர். 

    இச்சூழலில்தான், தீபாவளியை முன்னிட்டு வாரிசு திரைப்பட பாடல் வெளிவரும் என்று தகவல் வெளியானது. ஆனால், தீபாவளி அன்று பாடல்கள் எதுவும் வெளியாகாமல், வாரிசு திரைப்படத்தின் போஸ்டர்கள் மட்டுமே வெளிவந்தன. வெளிவந்த போஸ்டர்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன. 

    இருப்பினும், திரைப்படத்தின் அப்டேட் குறித்து தொடர்ந்து ரசிகர்கள் கேட்ட வண்ணமை இருந்தனர். இந்நிலையில், வாரிசு திரைப்படத்தின் பாடல் குறித்த அப்டேட் ஒன்று தற்போது வெளிவந்துள்ளது. அதன்படி, வாரிசு திரைப்படத்தின் முதல் பாடலின் புரோமோ இன்று வெளியிடப்படவுள்ளது. இதனால் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.

    தமன் இசையில் முதல் முறையாக விஜய் நடிக்கிறார். மேலும், தமன் தீவிர விஜய் ரசிகர் என்பதால் கோலாகலமான பாடலை எதிர்பார்க்கலாம் என்று கூறப்படுகிறது. அதோடு இன்று வெளிவரவுள்ள பாடலை விஜய் பாடியிருக்கவும் அதீத வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    இதையும் படிங்கவலியின் மொழி : மையோசைட்டிஸ் பற்றி அறிவோம்..! குணப்பபடுத்தக் கூடிய நோய்தானா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....