Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்மனுவை வாங்கிவிட்டு 'பிக் பாஸ்' போய்விடுவாரு - கமலை கடுமையாக விமர்சித்த வானதி சீனிவாசன்

    மனுவை வாங்கிவிட்டு ‘பிக் பாஸ்’ போய்விடுவாரு – கமலை கடுமையாக விமர்சித்த வானதி சீனிவாசன்

    மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் கமல்ஹாசன் நேரடியாக களத்திற்கு வந்து, அவர் என்ன செய்யப் போகிறார் என்பதை விளக்க வேண்டும் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். 

    முன்னதாக, கடந்த சில தினங்களாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் நடைபெற்ற பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

    அதுகுறித்து சட்டமன்ற உறுப்பினரும் பாஜக மூத்த தலைவருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தபோது பேசியதாவது:

    ஓராண்டுக்கு பிறகு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு கோவை தெற்கு தொகுதி குறித்து நினைவு வந்துள்ளது. மக்களை சந்தித்து கமல்ஹாசன் குறைகளைக் கேட்டுள்ளார். கழிப்பறை கட்டி தருகிறேன், சுத்தம் செய்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். நான் வேண்டுமானால் எந்த வார்டில் பொது கழிப்பிடங்கள் இருக்கிறது. எத்தனை பயன்பாட்டில் இல்லாமல் இருக்கிறது என்று பட்டியல் தருகிறேன். 

    இதையும் படிங்க : பெரியார் பல்கலைக்கழக இட ஒதுக்கீட்டில் நடந்த விதிமீறல்; விரிவான விசாரணை செய்ய ராமதாஸ் கோரிக்கை

    பொதுமக்களிடம் கமல்ஹாசன் மனு வாங்கக் கூடாது என்று தாம் சொல்லவில்லை, தாராளமாக வாங்கலாம். ஆனால், அதனை வாங்கிச் சென்று பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரச்னைகளுக்கு தீர்வு வழங்கலாம் என கமல் நினைக்கக் கூடாது.

    மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் கமல்ஹாசன் நேரடியாக களத்திற்கு வந்து அவர் என்ன செய்யப் போகிறார் என்பதை விளக்க வேண்டும். மக்களுக்கு சேவையாற்ற அனைவருக்கும் உரிமை இருக்கிறது. இப்போதாவது அவருக்கு கோவை தெற்கு குறித்து ஞாபகம் வந்ததை நல்ல விஷயமாக பார்க்கிறேன்.

    கமல்ஹாசன், உதயநிதிக்கு நெருங்கிய நண்பராக இருக்கிறார். உதயநிதியோடு திரைப்படம் சம்பந்தமாக பேசும்போது, கோவை தெற்கு தொகுதி பிரச்சனையைக் பற்றி பேசினால் மக்களுக்கு உதவியாக இருக்கும்.

    ஏனென்றால் அமைச்சர்களைவிடவும், அதிகாரம் மிக்கவராக இருப்பவர் உதயநிதிதான். சட்டப்பேரவையில் முதல்வருக்கு வணக்கம் தெரிவிப்பதை விட அனைவரும் உதயநிதிக்குதான் முதலில் வணக்கம் தெரிவிக்கிறார்கள்.

    அதேபோல் முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆ.ராசா பேசிய பேச்சுகளை ஆதரிக்கிறாரா? திமுக அதை ஒப்புக்கொள்கிறதா என்பதை தெளிவுபடுத்த வேண்டும். 

    திமுக கட்சியின் மூத்த நிர்வாகியும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா சட்டத்துக்கு எதிரான வகையில் பேசியுள்ளார். அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டுமென அனைத்து இடங்களிலும் பா.ஜ.க. சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. காவல்துறை அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அது மாதிரியான பேச்சுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வேடிக்கை பார்த்து ரசிப்பதை கண்டிக்கிறேன். இதற்கு உரிய விளக்கத்தை அவர் அளிப்பார் என எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....