Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்மக்களின் மனநிலையை மடைமாற்றவே, இந்தி எதிர்ப்பு போராட்டம் - வானதி சீனிவாசனின் காரசார அறிவிப்பு!

    மக்களின் மனநிலையை மடைமாற்றவே, இந்தி எதிர்ப்பு போராட்டம் – வானதி சீனிவாசனின் காரசார அறிவிப்பு!

    இந்தி திணிப்புக்கு எதிராக சமீபத்தில் திமுக கட்சியினர் கண்டனத்தில் ஈடுபட்டனர். மேலும், நேற்று சட்டசபையில் இந்தி திணிப்புக்கு எதிரான தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. 

    இது குறித்து எதிர்கட்சிகள் விமர்சித்து வந்தனர். இந்நிலையில், பாஜகவின் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இந்நிகழ்வு குறித்து தனது பார்வையை காரசாரமாக வெளிப்படுத்தியுள்ளார். 

    ‘மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, விலைவாசி உயர்வு என்று கடந்த ஒன்றரை ஆண்டுகால தி.மு.க. ஆட்சியின் அவலங்களால், தமிழக மக்கள் கொந்தளித்து போயுள்ளனர். ஆட்சிக்கு எதிரான மக்களின் மனநிலையை மடைமாற்ற, இந்தி எதிர்ப்பு என்ற ஆயுதத்தை தி.மு.க. மீண்டுமொரு முறை கையிலெடுத்திருக்கிறது’ என்று அவர் தெரிவித்துள்ளார். 

    மேலும், வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;

    பா.ஜ.க. வைப் பொறுத்தவரை அனைத்து இந்திய மொழிகளுக்கு சம முக்கியத்துவம் அளித்து வருகிறது, ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் பா.ஜ.க.வின் கொள்கை இதுதான். மத்திய பா.ஜ.க. அரசு எந்த மாநிலத்திலும், எந்த இடத்திலும் இந்தி மொழியை ஒருபோதும் திணிக்கவில்லை.

    இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அந்தந்த மாநில மொழிகளிலேயே பள்ளிக் கல்வி முதல் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர் கல்வி இருக்க வேண்டும் என்பதே பா.ஜ.க.வின் கொள்கை. இதனைத்தான் தேரிய கல்வி கொள்கை வலியுறுத்துகிறது. 

    தாய் மொழி வழி கல்விக்கு பா.ஜ.க. அரசின் புதிய கல்விக் கொள்கை வழி செய்கிறது. ஆனால், அதனை தி.மு.க.வும் அதன் கூட்டணி கட்சிகளும் எதிர்க்கின்றன. மாநில மொழிகளுக்கு மாற்றாக இந்தியை கற்க வேண்டும், இந்தியில் அலுவல்கள் நடக்க வேண்டும் என, மத்திய பா.ஜ.க., அரசு கூறவில்லை. புதிய கல்விக் கொள்கையில் கூட, மூன்றாவது மொழியாக இந்தி உட்பட எந்த இந்திய மொழிகளை வேண்டுமானாலும் விருப்ப பாடமாக எடுத்து படிக்கலாம் என்றே கூறப்பட்டுள்ளது.

    இந்தியை எதிர்க்கும், தமிழ் தான் எங்கள் உயிர் என பேசும் தி.மு.க. நிர்வாகிகளில் யாராவது தங்கள் பிள்ளைகளை தமிழ் வழியில் படிக்க வைத்துள்ளார்களா?

    தமிழகத்தில் தி.மு.க.வினர் நடத்தும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில், எத்தனை பள்ளிகளில் இந்தி பாடம் உள்ளது? என்பதை வெள்ளை அறிக்கையாக தி.மு.க. தலைமை வெளியிட வேண்டும். இந்தியில் மருத்துவப் படிப்பை துவங்க தி.மு.க. வின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மருத்துவத் துறையியின் எதிர்காலத்தை இருளில் தள்ளும் முயற்சி என, முரசொலி விமர்சித்துள்ளது. நாளை, தமிழில் மருத்துவப் படிப்பு வரும்போது அதனை தி.மு.க. ஏற்குமா, தமிழில் மருத்துவப் படிப்பு விவகாரத்தில் தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன என்பதை, முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் தெளிவுப்படுத்த வேண்டும்.

    தி.மு.க.வின் இந்தி எதிர்ப்பு நாடகத்தை நம்பி இனியும் தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள். தாங்கள் நடத்தும் பள்ளிகளில் இந்தியை பாடமாக வைத்து விட்டு, தங்கள் பிள்ளைகளை ஆங்கில வழியில் படிக்க வைத்துவிட்டு, அரசுப் பள்ளிகளில் மட்டும் தமிழ், தமிழ் என இரட்டை வேடம் போடும் தி.மு.க.வை இனியும் தமிழக மக்கள் நம்ப மாட்டார்கள்.

    பாரதிய ஜனதா இந்திய மொழிகளுக்கு, தாய் மொழி கல்விக்கு ஆதரவாக நிற்கிறதே தவிர, இந்தி மொழிக்கு அல்ல. இந்த உண்மையை தமிழக மக்கள் நன்கறிவார்கள்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். 

    இதையும் படிங்க: தடையை மீறி போராட்டம் நடத்திய எடப்பாடி பழனிசாமி: அதிரடியாக கைது செய்த காவல்துறை…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....