Thursday, May 2, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்'அடி ஆத்தி இது என்ன ஃபிலு' - தனுஷ் வரியில் வெளியான வாத்தி திரைப்பட பாடல்..

    ‘அடி ஆத்தி இது என்ன ஃபிலு’ – தனுஷ் வரியில் வெளியான வாத்தி திரைப்பட பாடல்..

    நடிகர் தனுஷின் வாத்தி திரைப்படத்தின் முதல் பாடல் யூடியூப் தளத்தில் வெளியாகவுள்ளது. 

    நடிகர் தனுஷ் நடிப்பில் தெலுங்கு திரைப்பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் வாத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில்,  சம்யுக்தா மேனன் நாயகியாக நடித்துள்ளார். மேலும், இப்படத்திற்கு ஜி..வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழி படமாக உருவாகி உள்ள இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இத்திரைப்படம் டிசம்பர் மாதம் 2-ஆம் தேதி வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்தது. இதைத்தொடர்ந்து, ‘வாத்தி’ திரைப்படம் குறித்த அப்டேட்டுகள் எதுவும் வெளியாகாமல் இருந்த நிலையில், பாடல் குறித்த அப்டேட் வந்தது. 

    அதன்படி, ‘வா வாத்தி’ எனப் பெயரிடப்பட்டுள்ள அப்பாடலிற்கு சுவேதா மோகன் குரல் கொடுக்க, நடிகர் தனுஷ் பாடல் வரிகளை எழுதியுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில்,  தற்போது வாத்தி திரைப்படத்தின் முதல் பாடல் யூடியூப் தளத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 

    முன்னதாக, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு காணொளி ஒன்றை பதிவிட்டார். ‘வா வாத்தி’ பாடலை தனுஷ் தமிழ் மற்றும் தெலுங்கில் பாடிய அக்காணொளி ரசிகர்களை கவர்ந்தது குறிப்பிடத்தக்கது. 

    இதையும் படிங்ககாற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுவடைந்தது – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....