Wednesday, May 1, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்இதுதான் வாத்தி க்ளைமாக்ஸா? - படக்குழு வெளியிட்ட வீடியோ

    இதுதான் வாத்தி க்ளைமாக்ஸா? – படக்குழு வெளியிட்ட வீடியோ

    வாத்தி திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகள் தற்போது யூடியூப் தளத்தில் வெளியிட்டுள்ளது. 

    நடிகர் தனுஷ் நடிப்பில் தெலுங்கு திரைப்பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி வெளிவந்த படம்தான், வாத்தி. இத்திரைப்படத்தில், சம்யுக்தா மேனன் நாயகியாக நடித்திருந்தார். மேலும், இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார். 

    தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழி படமாக உருவாகி வெளிவந்த இந்தப் படம், கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இருப்பினும், திரையரங்குகளில் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது.

    இதுவரையில், வாத்தி திரைப்படம் தற்போது 100 கோடி வசூலை எட்டியுள்ளது. இதை படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில், வாத்தி திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகள் தற்போது யூடியூப் தளத்தில் படக்குழுவால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. மேலும், வெளியான காட்சி க்ளைமாக்ஸ் காட்சி என்று கூறப்படுகிறது. 

    நடிகர் தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என்ற படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

    ஜவான் படத்தில் விஜய்; இவ்வளவு நேரம் வருவாரா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....