Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்ஜவான் படத்தில் விஜய்; இவ்வளவு நேரம் வருவாரா?

    ஜவான் படத்தில் விஜய்; இவ்வளவு நேரம் வருவாரா?

    நடிகர் விஜய் ஜவான் படத்தில் 15 நிமிடம் முதல் 20 நிமிடம் வரையில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    நடிகர் ஷாருக்கானின் பதான் படம் கடந்த ஜனவரி 25-ஆம் தேதி வெளியாகி பெரும் வசூல் சாதனையை நிகழ்த்தி வருகிறது. பதான் படத்திற்கு பிறகு ஷாருக்கான் நடிப்பில் வெளியாகவுள்ள படம்தான், ஜவான். 

    இயக்குநர் அட்லீ இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகிவரும் ஜவான் படத்திற்கு இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஜவான் படத்திலிருந்து வெளியிடப்பட்ட படத்தின் அறிமுக வீடியோவும் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது. 

    அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா போன்றோர் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்தப் படத்திலிருந்து ஷாருக்கான் வெறித்தனமாக சண்டையிடும் 6 நொடி சண்டைக்காட்சிகள் இணையத்தில் வெளியாகி டிரெண்டானது.

    இந்நிலையில், ஜவான் படத்தில் நடிகர் விஜய் கௌரவத் தோற்றத்தில் நடித்திருப்பதாக தொடர்ந்து தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில், தற்போது நடிகர் விஜய் ஜவான் படத்தில் 15 நிமிடம் முதல் 20 நிமிடம் வரையில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    ‘நன்றி மறக்காமல் இருக்க வேண்டும்’ – வீடியோவை வெளியிட்ட ரிஷப் பந்த்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....