Saturday, May 4, 2024
மேலும்
    Homeசெய்திகள்உதயநிதி சீக்கிரம் துணை முதல்வர் ஆவார்! உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி

    உதயநிதி சீக்கிரம் துணை முதல்வர் ஆவார்! உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி

    உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவை பொறுப்பு கால தாமதமாகவே வழங்கப்படுகிறது உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

    சென்னை தலைமைச் செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்;

    பொறியியல் கல்லூரியில் இப்பொழுதுதான் முதல் முறையாக தமிழை பாடமாக அறிமுகம் செய்துள்ளோம். இந்த ஆண்டு முதல் தமிழ் பாடம் நடத்தப்படும். தமிழர் மரபு, தமிழர் தொழில்நுட்பம் ஆகிய இரண்டு பாடங்களும் பொறியியல் கல்லூரிகளில் தமிழ் பாடமாக நடத்தப்படும்

    ஏற்கனவே உள்ள தமிழ் ஆசிரியர்களை பாடம் நடத்த அறிவுறுத்தியுள்ளோம், இன்னும் புதிதாக தமிழ் ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. முழு நேர ஆசிரியர்கள் நியமிக்கப்படும் வரை தற்காலிகமாக ஏற்கனவே உள்ள ஆசிரியர்கள் பாடம் நடத்துவார்கள்.

    வெளிநாட்டு, மற்றும் வெளி மாநில மாணவர்களுக்கு மாணவர்களுக்கு தமிழ் பாடங்களை அவர்கள் புரிந்து படிக்கக் கூடிய வகையில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து பாடம் நடத்தப்படும்.

    வெளிநாட்டு மாணவர்களும் திராவிட மாடல் ஆட்சியை தெரிந்து கொள்ளும் வகையில் நடத்தப்படும். தமிழ் ஆசிரியர்களை கொண்டே இரண்டு பாடங்களும் நடத்தப்படும். அடுத்த ஆண்டு முதல் பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் தமிழர் மரபு, தமிழர் தொழில்நுட்பம் ஆகிய இரண்டு பாடங்களும் நடத்தப்படும்

    PhD, UGC தகுதி பெற்றவர்கள் மட்டுமே இதில் ஆசிரியர்களாக நியமனம் செய்யப்படுவார்கள்.நிலுவையில் உள்ள சட்ட மசோதாக்களை ஆளுநர் ஒப்புதல் தருவதற்கு சட்டரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.

    உதயநிதிக்கு அமைச்சர் பொறுப்பு 1.5 ஆண்டுகள் தாமதம் என கருதுகிறேன். அவர் திறமை பெற்ற இளைஞர், எல்லாத் துறைகளிலும் திறமை மிக்கவர் உதயநிதி ஸ்டாலின். திராவிட மாடல் ஆட்சியை நடத்துகிற இளைஞராக உதயநிதி ஸ்டாலின் கண்டிப்பாக செயல்படுவார்.

    இதைவிட இன்னும் அதிகமான பொறுப்புகளை ஏற்று வருங்காலத்தில் உதயநிதி செயல்படுவார். வாரிசு அரசியல் குற்றச்சாட்டு ஒன்றும் புதிது அல்ல. வாரிசு அரசியல் என்று பார்த்தால் கூட பத்து சதவீதம் பேர் மட்டுமே அவர்களின் வாரிசுகள் அரசியலில் இருப்பர் மீதம் உள்ளவர்கள் அனைவருமே கட்சியில் இடம் பெற்றுள்ளனர்

    அமைச்சரவை என்பது கூட்டுப் பொறுப்புணர்வு. அனைவரும் இணைந்து செயலாற்றுவோம்.உதயநிதி சீக்கிரம் துணை முதல்வர் ஆவார் என உங்களைப் போலவே நானும் எதிர்பார்க்கிறேன்.

    ஓய்வூதியத் திட்டம் குறித்து கேள்வி எழுப்பிய ராமதாஸ்… தமிழக அரசு முன்வருமா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....