Wednesday, May 1, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாகொலைக்கு ஆதரவா?- கருத்துகளை நீக்க அரசு உத்தரவு

    கொலைக்கு ஆதரவா?- கருத்துகளை நீக்க அரசு உத்தரவு

    உதய்பூரில் நடந்த படுகொலைக்கு சமூக வலைதளங்களில் ஆதரவு தெரிவித்துள்ள கருத்துகளை உடனடியாக நீக்குமாறு ஒன்றிய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

    உதய்பூரில் ஜூன் 28ம் தேதி கன்ஹையா லால் எனப்படும் 48 வயதான தையல்காரர் ஒருவர் இரண்டு இஸ்லாமியர்களால் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். பாஜகவின் செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மா, முகமது நபி பற்றிக் கூறிய சர்ச்சைக் கருத்துகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் கன்ஹையா லால் பதிவிட்டதால் கொலை செய்யப்பட்டார் என கொலையாளிகள் கூறி இருந்தனர்.

    கொலை செய்த பிறகு இரு சக்கர வாகனத்தில் தப்பிச்செல்ல முயன்ற கொலையாளிகளை காவலர்கள் கைது செய்தனர். இந்த படுகொலையினால் ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் பெரும் கலவரங்கள் நடைபெற்றன. 

    இதனால் மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஒரு நாள் முழுவதும் இணைய சேவை துண்டிக்கப்பட்டன. உதய்ப்பூரில் நடந்த படுகொலை சம்பந்தமான காணொளிகளும், புகைப்படங்களும் சமுக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டது. இது மட்டுமின்றி கொலைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சிலர் சர்ச்சையான கருத்துகளை தெரிவித்துவந்தனர்.

    பொதுமக்களிடையே நிலவும் அமைதியினைக் குலைக்கும் வகையில் இருக்கும் இந்த ஆதரவு கருத்துகளை உடனடியாக நீக்குமாறு சமூக வலைதள நிறுவனங்களுக்கு, இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமானது அறிக்கை ஒன்றினை அனுப்பியுள்ளது. அதில்,

    ‘செய்தியாகவோ, புகைப்படமாகவோ, காணொளிகளாகவோ உதய்பூர் படுகொலைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பதிவிட்டுள்ள கருத்துகளை உடனடியாக நீக்க வேண்டும்.’

    ‘மக்களிடையே நிலவி வரும் அமைதியினையும், நல்லிணக்கத்தினையும் கெடுக்கும் வகையில் அமைந்துள்ள இந்த கருத்துகளை பொதுநலம் கருதி நீக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.’ 

    மேலும், இது தொடர்பாக நேற்று கருத்து தெரிவித்த உச்சநீதிமன்றம், “நுபுர் சர்மா கூறிய கருத்துக்கள் தான் தற்போது நாட்டில் நிலவி வரும் அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம். சர்ச்சைக்குரிய வார்த்தைகளைக் கூறியதால் தனக்கும், இந்த நாட்டுக்கும் ஆபத்தினை நுபுர் சர்மா விளைவித்துள்ளார்.  அவர் கூறிய வார்த்தைகள் தான் உதய்ப்பூர் சம்பவத்துக்கும் காரணம்” என கூறியதோடு கண்டனங்களையும் பதிவுசெய்தனர்.

    இதுமட்டுமன்றி, நுபுர் சர்மா தொலைக்காட்சியின் வாயிலாக நாட்டு மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்கவேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

    நடுவானில் திடீர் புகை- அவசரமாக தரையிறங்கிய விமானம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....