Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாவரம்பு மீறியதா இந்திய அரசு?- வழக்கு தொடர்ந்த ட்விட்டர்

    வரம்பு மீறியதா இந்திய அரசு?- வழக்கு தொடர்ந்த ட்விட்டர்

    சமூக ஊடக நிறுவனமான ட்விட்டரில் பதிவிடப்படும் சர்ச்சைக்குரிய பதிவுகளை அகற்ற உத்தரவிடுவதில் இந்திய அரசு அதிகாரிகள் அதிகார வரம்பு மீறலில் ஈடுபடுவதாக ட்விட்டர் நிறுவனம் புகார் தெரிவித்துள்ளது. 

    ட்விட்டர் நிறுவனம் 2021 ஐடி விதிகளுக்கு உள்பட்டு செயல்படத் தவறிவிட்டது. ஆதலால் ஜூலை 4-ம் தேதிக்குள் விதிகளுக்கு உள்பட்டு ட்விட்டர் நிறுவனம் இயங்க வேண்டும் என்று கடந்த வாரம் இந்திய தொழில்நுட்ப அமைச்சகம் கூறியிருந்தது. மேலும், அரசு வழிகாட்டுதல்கள் தொடர்ந்து மீறப்படுமானால், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ட்விட்டர் நிறுவனத்தை ஒன்றிய அரசு எச்சரித்திருந்தது.

    இந்திய தொழில்நுட்ப அமைச்சகத்தின் புகாருக்கு ட்விட்டர் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், ஒன்றிய அரசு விடுத்த எச்சரிக்கையை அடுத்து, இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையீடக் கோரி கர்நாடகா உயர் நீதிமன்றத்தை நேற்று ட்விட்டர் நிறுவனம் அனுகியுள்ளது. 

    இது குறித்து ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளாதாவது: 

    ’’ட்விட்டர் பதிவுகள் விவகாரத்தில் உரிய கண்காணிப்பை தங்கள் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. கடந்த ஏப்ரல் 26 முதல் மே 25 வரையிலான ஒரு மாதத்தில் மட்டும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மீறிய 46 ஆயிரம் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், சர்ச்சைக்குரிய பதிவுகளை அகற்ற உத்தரவிடுவதில் இந்திய அரசு அதிகாரிகள் அதிகார வரம்பு மீறலில் ஈடுபடுவதாக ட்விட்டர் நிறுவனம் கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடர்ந்துள்ளது.

    ’’நாட்டில் சமூக வலைதளங்கள் முறையாக ஒழுங்குபடுத்தபட வேண்டும். அப்போதுதான் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையிலான விதிமுறைகளை முறையாக பாதுகாக்க முடியும்’’ என்று உச்சநீதிமன்ற நீதிபதி ஜே.பி.பார்திவாலா சமீபத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    எம்எல்ஏக்களின் துரோகம் வேதனையளிக்கிறது: உத்தவ் தாக்கரே

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....